ஆசிரியைக்கு தண்டனை கொடுத்த அரசியல்வாதியை
பிரதம அதிதியாக்கிய
அதிபர் மீது விசாரணை
தமது மகளை கண்டித்த ஆசிரியையை மண்டியிட செய்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரை, நிகழ்வு ஒன்றுக்கு பிரதம அதிதியாக அழைத்த, பாடசாலை அதிபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான உத்தரவை, வடமேல் மாகாணசபை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வடமேல்மாகாண கல்வி அமைச்சர் சந்தியாகுமார ராஜபக்ஸ இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோரின் வருகையின்போது மாத்திரமே பேன்ட் வாத்தியத்தை இசைக்க முடியும் என்று சுற்றுநிருபம் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சரத்குமாரவை வரவேற்க பேன்ட் வாத்தியம் இசைக்கப்பட்டமை குறித்தும் மாகாண அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நவகத்தேகம நவோதயா வித்தியாலயத்தின் அதிபர் மல்கம் பீட்டர்சன், ஆசிரியை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வுக்கு அழைத்திருந்தார்.
இந்த பாடசாலை ஆசிரியை ஒருவரையே சரத்குமார பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் மண்டியிட செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்காக அவருக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தாம் மாத்திரம் சரத்குமாரவை அழைக்கும் முடிவை எடுக்கவில்லை.
பாடசாலையின் 15பேரைக்கொண்ட விளையாட்டுக்குழுவே இந்த முடிவை மேற்கொண்டதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
ஆசிரியையை முழங்காலிட வைத்த அமைச்சர்
விளையாட்டுப் போட்டிக்கு தலைமை தாங்கினா
கடந்த வருடம் ஆசிரியை ஒருவரை மாகாண சபை அமைச்சர் ஒருவர் முழங்காலிட வைத்த சம்பவமானது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டதோடு ஆசிரிய சமூகத்தையே அவமானப்படுத்திய சம்பவமாக கருதப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது எதிர்ப்பினை தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரான முன்னாள் மாகாண சபை அமைச்சரான ஆனந்த சரத்குமாரவிற்கு குறித்த ஆசிரியை கற்பிக்கும் பாடசாலையிலேயே பலத்த வரவேற்பு நேற்றைய தினம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவகத்தேகம நவோதய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கு தலைமை விருந்தினராக அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் அலுவலகர்களால் குறித்த நபர் அழைக்கப்பட்டதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாகாணசபை அமைச்சருக்கு வாத்திய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு மாணவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பலத்த வரவேற்பளிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிகழ்விற்கு வேறெந்த அரசியல்வாதியோ,பாடசாலை மட்ட உயர் அதிகாரிகளோ வருகை தரவில்லையென்றும் வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று அதிபர்கள் மாத்திரமே இந்த நிகழ்விற்கு வருகை தந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment