கிழக்கு மாகாண முதலமைச்சரை
சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் சந்தித்தார்
சிங்கப்பூர்
நாட்டின் இலங்கைக்கான
உயர்ஸ்தானிகர் சந்திர தாஸ் (CHANDRA DAS) இன்று காலை கிழக்கு மாகாண
முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை சந்தித்து
கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது
கிழக்கு மாகாணத்தின்
குறிப்பாக திருகோணமலை
மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி நடவடிக்கைகளும் சிங்கப்பூரிடம்
கையளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் அபிவிருத்தி
நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டபடி கொண்டு செல்லப்பட வேண்டும்
எனவும் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அபிவிருத்தி திட்டங்களை திட்டமிட்டபடி எதிர் வரும் ஏப்ரல் அல்லது மார்ச் மாத காலப்பகுதியில் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment