வவுனியா
மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை
மேம்படுத்துவதற்கு நடவடிக்கை!
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்
நேரில் விஜயம்
வவுனியா
மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
விளையாட்டுத்
துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நேரில் விஜயம் செய்து இக்கலந்துரையாடலை மேற்கொண்டார்.
வன்னி
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் அழைப்பின் பேரில் பிரதி அமைச்சர் ஹரீஸ்
வவுனியாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
இக்கலந்துரையாடலில்
வவுனியா மாவட்ட பாடசாலைகளில் உள்ள மைதானப் பிரச்சனைகள், உதைப்பந்தாட்ட வீரர்கள், கிரிக்கெட்
வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வெளிநாட்டு விளையாட்டு நிகழ்வுகளுக்கு செல்லும்
மாவட்ட மட்ட வீரர்களுக்கான உதவிகளை வழங்குதல், மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்தும்
செயற்திட்டத்தை முன்னெடுத்தல் என பல விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.
இந்தக்
கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன்,
வடமாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சர் குருகுலராஜா, விளையாட்டுத்துறை அமைச்சின்
செயலாளர் எஸ்.திஸாநயக்கா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோதரராதலிங்கம், முத்தலிப்
பாபா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்களின்
பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment