அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின்
ஏற்பாட்டில்
இலவச
கருத்தரங்கு!
(எஸ்.அஷ்ரப்கான்)
அகில
இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில் அரச உயர் பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைகளுக்கும்,
சட்டக் கல்லுரி, திறந்த பல்கலைக் கழக சட்டபீடம்
ஆகியவற்றுக்கும் ஆட்களைசேர்ப்பதற்குமாக நடாத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதற்கும்,
அவை தொடர்பான அடிப்படை விடயங்களை தெளிவுபடுத்துவதற்குமாக இலவச கருத்தரங்கு ஒன்று கொழும்பில்
நடைபெறவுள்ளதாக பேரவையின் பொதுச் செயலாளர் மகாரிம் தாஹா தெரிவித்துள்ளார்.
அகில
இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் விசேட இலவச கருத்தரங்கு
எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி அதாவது நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணியிலிருந்து
பி.ப. 3 மணிவரை கொழும்பு தெமடகொட வீதியில் அமைந்துள்ள பேரவையின் தலைமைக் காரியாலயத்தில்
நடைபெறவுள்ளதாகவும், இதில் அனைவரும் கலந்து கொள்ள முடியும் எனவும், இதற்கான மேலதிக
விபரங்கைளைப் பெற (0112694075,0112689613) என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும்
பொதுச் செயலாளர் மேலும் கேட்டுள்ளார்.
இலங்கை
நிருவாக சேவை மற்றும் கல்வி நிருவாக சேவை என்பவற்றுக்கு ஆட்சேர்ப்பதற்காக வர்த்தமானி
அறிவித்தல் பிரசுரமாகி இருக்கின்றது என்பதும்
இங்கு குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment