பின்னணிப் பாடகி ஷான்
சென்னையில் மர்மமான முறையில் மரணம்!


கேரள இசையமைப்பாளரின் மகளும், தமிழ் திரைப்பட பின்னணி பாடகியுமான ஷான் சென்னையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார் ர்ன அறிவிக்கப்படுகின்றது.
கோடம்பாக்கம் சக்கரபாணித் தெருவைச் சேர்ந்த ஷான் ஜான்சன் ( வயது29), கேரள இசையமைப்பாளர் ஜான்சனின் மகளான இவர், மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
தமிழில் எங்கேயும் எப்போதும், பறவை உள்ளிட்ட பல படங்களில் பாடல்களையும் ஷான் பாடியுள்ளார்.
கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த அவர், மயிலாப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணிபுரிந்தார்.

இவரது வீட்டுக் கதவு வெள்ளிக்கிழமை காலை முதல் திறக்கப்படாமலேயே இருந்தது. நண்பகல் ஷான் ஜான்சன் வீட்டுக்கு வந்த நண்பர்களும், உறவினர்களும் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த அசோக்நகர் பொலிஸார் அங்கு சென்று, விசாரணை நடத்தியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top