நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா
காலமானார்
நேபாளம்
நாட்டின் முன்னாள் பிரதமரும் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சுஷில் கொய்ராலா
இன்று அதிகாலை காலமானார் என அறிவிக்கப்படுகின்றது. அவருக்கு வயது 78.
நாக்கில்
ஏற்பட்ட புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற வந்த கொய்ராலா, நுரையீரலில்
ஏற்பட்ட பிரச்னை காரணமாக மூச்சுவிடுவதில் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை
அவர் தனது இல்லத்தில் காலமானார்.
அவரது
உடல் நேபாளம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலுக்கு
தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்தில்
புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டதில் முக்கிய பங்காற்றியவர் கொய்ராலா. அவரது
ஆட்சியின்போது கடந்த நவம்பர் 20 ஆம் திகதி, புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் கே.பி.ஒலியிடம் தோல்வியடைந்தார் கொய்ராலா.
இந்தியாவின்
பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா, 1954 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
விமானத்தை கடத்தியது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள்
இந்திய சிறையில் அடைக்கப்பட்டார் கொய்ராலா.
நேபாள
காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு இரண்டு வாரத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று
காலமாகியிருக்கிறார் கொய்ராலா.
0 comments:
Post a Comment