வெளிநாட்டு வேலைவாய்ப்பு கல்முனை பயிற்சி
நிலையம்
வசதிகள் போதாதாம் இடம் மாறுகின்றதாம்!
இப்போது இப்படிச் சொல்கின்றார் பைசால் காசிம்!!
இலங்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தின் கல்முனை பயிற்சி
நிலையத்தை தொடர்ந்தும் கல்முனையிலேயே தக்க வைத்துக் கொள்ள
வேண்டுமானால் 100 பெண்கள்
தங்கியிருந்து உள்ளகப்
பயிற்சி வசதிகளைப்
பெறக் கூடியவாறு
சாதாரணமாக 1 ஸ்டார் ஹோட்டேல் போன்ற
ஒரு வசதியான
இடம் கல்முனை
பிரதேசத்தில் பெற்றுத்தருமாறும் இதனை மார்ச் 1ஆம் திகதிக்கு
முன் தங்களுக்கு
கடைசி திகதி
தருவதாகவும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சா் தலத்தா
அத்துக் கோரள கேட்கின்றார். ஆனால், அவ்வாறான வசதிகள்
அடங்கிய இடம் எமது பிரதேசத்தில் உடனடியாக பெற்றுக்
கொள்ள முடியாமல்
உள்ளது என முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும் திகாமடுல்ல மாவட்ட
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பைசால் காசிம்
தெரிவித்துள்ளார்.
மேற்படி
கல்முனையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி நிலையம் முஸ்லிம் காங்கிரஸின்
ஸ்தாபகத் தலைவா் மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப்
அவா்களின் முயற்சியினால் 19 வருடத்திற்கு முன்பு
நிறுவப்பட்டது.
(தலைவரால் கல்முனைக்கு கொண்டுவரப்பட்ட சில
நிறுவனங்கள் பல காரணங்கள் கூறப்பட்டு வெளியிடங்களுக்கு எடுத்த்ச் செல்லப்படும்
துர்ப்பாக்கிய நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது)
பிரதியமைச்சா்
பைசால் காசீம் இது சம்பந்தமாக மேலும் தெரிவித்திருப்பதாவது,
அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள், அவா்களது கட்டடவரைபுகள், வாகன
தரிப்பிடம், ஒய்வறைகள், பயிற்சி பட்டறைகள் நடாத்தக் கூடிய வசதிகள் போன்ற அலுவலங்களை
எமது பிரதேசத்தில் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது.
ஏற்கனவே
இந்த அரசின்
ஆட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இருந்தே கல்முனை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒரு இட நெருக்கடியாகவும்
கூடுதல் வாடகை
செலுத்தப்பட்டாலும் அங்கு உள்ள
ஊழியா்கள், நாளாந்தம் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்குரிய
போதிய இடவசதி
அங்கு காணப்படுவதில்லை. அதற்காக
சிறந்த ஒரு
இடத்தினை பெற்றுத்தருமாறு
அமைச்சா் அத்துக்கோரள கோரிக்கை விடுத்திருந்தார்
அங்கு மத்திய
கிழக்கு , சைப்பிரஸ்,
சிங்கப்பர், கொரியா போன்ற நாடுகளுக்கு செல்லும்
மூவினங்களையும் சார்ந்த 100 பெண்கள்
2 வாரமாவது தங்கி நின்று பயிற்சி
பெற்றுக் கொள்ளவேண்டும்.
தங்குமிடம், பயிற்சி
அறைகள், வகுப்பறைகள், மொழிப்பயிற்சி, இலக்ரோணிக்
இயந்திரங்கள் பயிற்சி, மற்றும் அவா்கள் சாதாரண
இயற்கையாக தங்கி
ஓய்வு பெறக்
கூடிய கார்டன் வசதி உள்ள ஒர் இடத்தைப் பெற்றுத்தாருங்கள்
என கூறினார். 100 பேர் தங்கங்
கூடியவாறென்றால் ஒரு ஹோட்டேல் தரத்திலான பயிற்சி
நிலையத்ததையே அவா் வேண்டுகின்றார்
அன்மையில்
பாராளுமன்றத்தில் கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம்
சம்பந்தமாக அமைச்சா் தலத்தா அத்துக்கோரலவுடன் தலைவா் ஹக்கீம், மற்றும் பிரதியமைச்சா்
ஹரீஸ், பாராளுமன்ற
உறுப்பின மன்சூர்
ஆகியோறும் சந்தித்து
இடமொன்றை பெற்றுத்
தரும்வரை அம்பாறை
கொண்டு செல்வததை
நிறுத்துங்கள் என சொல்லியிருந்தோம். அதன் பின்னா் அமைச்சாரவையில்
கூட்டத்தில் சென்ற சமயத்தில் கூட நானும்
தலைவா் ஹக்கீம்
தலத்தாவுடன் கலந்துரையாடினோம். இவ்விடயமாக
அந்த பயிற்சி
நிலையத்தினை அங்கு நிலவும் இடப் பற்றாக்குறை
பற்றி பிரதமா்
ரணில் விக்கிரமசிங்கவுடன்
பேசி உள்ளதாகவும்
அமைச்சா தலாத்தா
அத்துக்கோரல தெரிவித்தார்.
அதன்
பின் ஒரு
சா்ந்தா்பத்தில பிரதமா் ரணில் விக்கிரம சிங்க
தலைவா்
ரவுப் ஹக்கீமிடமும் இப் பயிற்சி நிலையத்திற்கு
உரிய போதிய இடவசதிகளை
கொண்ட இடமொன்றை
பெற்றுக் கொடுக்குமாறு கூறியிருந்தார்.
இதுவரை
100 பேர் தங்கி
பயிற்சி நிலையம்,
தங்குமிடம், வகுப்றைகள் ஓய்வு பூங்காவனம் போன்ற வசதிகளை
கொண்ட நிலையம்
கல்முனையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
. அமைச்சா் அத்துக் கோரல கேட்டுதற் கிணங்க மார்ச் 1முதலாம் திகதி
கடைசி தினமாகும். ஆனால் கல்முனையிலிருந்து பொத்துவில் வரையிலான
பிரதேசங்களில் மிகவும் இட நெருக்கடியாக மக்கள் வாழ்கின்றனா்.
ஒரு மாவட்டக்
காரியாலயம் பெறும் போது அரசாங்கத்தின் சட்ட
திட்டங்கள், அவா்களது கட்டடவரைபுகள், வாகன தரிப்பிடம்,
ஒய்வறைகள்,
பயிற்சி பட்டறைகள் நடாத்தக் கூடிய
வசதிகள் போன்ற
அலுவலங்களை எமது பிரதேசத்தில் உடனடியாக பெற்றுக்
கொள்ள முடியாமல்
உள்ளது. இவ்வாறு பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிரிவிக்கின்றார்.
பிரதி அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் ஆகியோர் மக்களுக்கு ஏற்கனவே வழங்கிய உறுதி மொழிகள் ************************************************************************************
பிரதி அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் ஆகியோர் மக்களுக்கு ஏற்கனவே வழங்கிய உறுதி மொழிகள் ************************************************************************************
தற்போது இயங்கி வரும் கட்டிடத்தினை மாற்றி கல்முனையில் வேறு
ஒரு கட்டிடத்தில் இவ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்வரும் காலங்களில்
இயங்கும் எனவே இவ் விடயம் பற்றி மக்கள் அச்சமடைய தேவையில்லை இவ்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கல்முனைப் பிரதேசத்தில் தொடர்ந்து இயங்கவுள்ளது
"
-
பைசால் காசிம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதி அமைச்சர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.எம்.மன்சூர், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விணக்கப்பாடு ஏற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் தலதா அத்துகோரளை " போதிய இடவசதி இன்மை காரணமாகவே கல்முனையிலிருந்து குறித்த பணியகத்தை இடமாற்ற தீர்மானித்ததாக " கூறினார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் " கல்முனை கரையோரப் பிரதேசத்தில் போதுமான இடவசதியுடன் கூடிய இடத்தை தான் பெற்றுத்தருவதாக" உறுதிமொழி வழங்கியதை தொடர்ந்து கல்முனையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இடமாற்றுவது தொடர்பான திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
- எம்.ஐ.எம்.மன்சூர்
0 comments:
Post a Comment