கல்முனைப் பிரதேசத்தில்
வீடு உடைக்கப்பட்டு
நகைகள் திருட்டு!
கல்முனை
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
கல்முனைக்குடி செயிலான் வீதியில் அமைந்துள்ள வீடு
ஒன்று உடைக்கப்பட்டு
ஏழு லட்சத்து
25 ஆயிரம் ரூபா
பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருப்பதாக அந்த வீட்டின்
உரிமையாளர் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை ஐந்து மணி
தொடக்கம் இரவு
ஒன்பது மணி
வரையான நேர
இடைவெளிக்குள் தாம் குடும்ப சகிதம் வெளியே
சென்றிருந்த வேளையில் இந்த கொள்ளைச் சம்பவம்
இடம்பெற்றிருப்பதாக அவர் தனது
முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கல்முனைக்குடி
செயிலான் வீதியைச்
சேர்ந்த தங்க
நகை வியாபாரத்தில்
ஈடுபடுகின்ற வர்த்தகர் ஒருவரே இந்த முறைப்பாட்டைப்
பதிவு செய்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment