இரத்த வெள்ளத்தில்
உயிருக்காக மன்றாடிய
கடாபியின் கடைசி நிமிடங்கள்!
லிபியா
நாட்டை 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி, 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களால்
கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில்,
கடந்த 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களின் மத்தியில் சிக்கிய கடாபி, அவர்களிடம், இரத்த
வெள்ளத்தில், என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சும் படங்கள் வெளியாகியுள்ளது.
அந்த
வீடியோவில், ஒரு டிரக் வண்டியின் மீது ரத்த வெள்ளத்தில் கடாபி அமர வைக்கப்பட்டிருக்கிறார்,
அவரை சுற்றி கிளர்ச்சியாளர்கள் உற்சாகத்தில் கத்துகிறார்கள்.
ஒரு
கிளர்ச்சியாளர், அவரது கழுத்தினை இறுக பிடித்துக்கொண்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கிறார்,
கடாபியின் முகம் மற்றும் உடம்பிலிருந்து இரத்தம் ஊற்றுகிறது, அந்த தருணத்தில் கடாபி,
உயிருக்காக மன்றாடுகிறார்.
இந்த
காட்சியை Mr Almani என்ற நபர் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளார், கடாபி இறந்து
4 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து
அந்நபர் கூறியதாவது, இஸ்லாமிய மதத்தில் காழ்ப்புணர்ச்சி கொண்டு ஒரு நபரை தண்டிப்பது
குறித்து போதிக்கப்படவில்லை, ஆனால் அங்கு கூடியிருந்தவர்கள் யாரும் இந்த சம்பவத்தை
தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும்,
அந்த கூட்டத்தில் Mohammed Elbibi என்ற 17 வயது நபர்,
கடாபியின் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு அதனை உலகத்திற்கு காட்டுகிறார்.
துப்பாக்கி
வைத்திருக்கும் அந்த நபரை, கிளர்ச்சியாளர்கள் சேர்ந்து தூக்கி பிடிக்கின்றனர், கடாபி,
தான் பயன்படுத்தி வந்த துப்பாக்கியை தனது மகனுக்கு கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால்,
அத்துப்பாக்கி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது, இத்துப்பாக்கியானது, கடாபியை
கிளர்ச்சியார்கள் தாக்குகையில் தரையில் இருந்து எடுக்கப்பட்டது என அந்நபர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment