மனித உரிமை ஆணையாளர் ஹுஸைனின் விஜயத்தில்
வடக்கு
முஸ்லிம்கள் புறக்கணிப்பு!
கொழும்பில்
இன்று ஆர்ப்பாட்டம்!!
ஐநா
மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கான விஜயத்தின் போது வடக்கு வாழ் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைக்கான
ஐநா அலுவலகத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
ஐநா
மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது தமிழ் மக்கள் மாத்திரமே கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும்,
வடபகுதி முஸ்லிம் மக்கள் குறித்து அவதானம்
செலுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யுத்தத்தினால்
உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் எனவும், தமது பிரச்சினைகள் குறித்து எந்தவொரு தரப்பினரும் கருத்து
வெளியிடவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன்,
வடப் பகுதியிலுள்ள தமது காணிகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருப்பதாகவும், அந்த காணிகள் இன்று வரை தமக்கு
மீள வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐநா
மனித உரிமை ஆணையாளரை சந்திப்பதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தி தருமாறு தாம் கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும்,
அந்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டிருந்ததாகவும்
ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment