எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய வழக்கில்

ஞானசார தேரர்  நாளை வரை விளக்கமறியலில்!


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நாளை 10 ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்க மறியலில் வைப்பதற்கு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருந்தது.

இந்நிலையில், ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நாளை 10 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞானசாரதேரரை விளக்க மறியலில் வைப்பதற்கு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top