அமைச்சர்களுக்கான வாகனம் கொள்வனவு
ஏனைய 29 நல்லாட்சி
அமைச்சர்களும் வெளியிடுவார்களா ?
அரசாங்கத்தின்
30 அமைச்சர்களுக்காக வாகனங்களை கொள்வனவு
செய்வதற்காக 117 கோடி ரூபா நிதியை ஒதுக்குமாறு கோரி முழுமையான மதிப்பீடொன்று ஆளுங்கட்சியின்
பிரதம கொரடா, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
22 அமைச்சர்கள்,
இராஜாங்க அமைச்சர்கள்
மற்றும் பிரதி
அமைச்சர்கள் உட்பட 30 பேருக்கு இதன் மூலம்
வாகனங்கள் கொள்வனவு
செய்யப்படுவதற்காக நிதி ஒதுக்கப்படவுள்ளது.
இது விடயமாக கொழும்பில் அமைச்சரவை முடிவினை
அறிவிக்கும் மாநாட்டின் போது மக்கள் மீது வரிச்சுமையினை
அதிகரிக்கின்றது இப்படியான நிலையில் அரசு, அமைச்சர்களின்
வாகன கொள்வனவிற்கு
சலுகைகளை வழங்குவது
முறையா? என
ஊடகவியலாளர்கள் கேள்விகளை அமைச்சர்களிடம் தொடுத்தனர்.
அதற்கு
பதிலளித்த அமைச்சர்கள்
20 வருடங்களிற்கு ஒருமுறை அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கு
சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே வாகன
கொள்வனவிற்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரிவத்தார்கள்.
இதன்
போது சரத்பொன்சேகாவினால்
7 கோடி ரூபாவிற்கு
மேற்கொள்ளப்பட்ட வாகன கொள்வனவு பற்றியும் கேள்வி
கேட்கப்பட்ட போது அமைச்சர்கள் உரிய
பதிலினை வழங்கவில்லை.
ஊடகவியலாளர்களால்
எழுப்பப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்களின்
பதிலாக 20 வருடங்களுக்கு
ஒருமுறை வழங்கப்படும்
வாகன கொள்வனவு
சந்தர்ப்பமே வழங்கப்பட்டது என்ற பதிலினையே தொடர்ந்தும்
வழங்கினர்.
மக்களுக்கு
வரிச்சுமை தொடர்ந்தும்
அதிகரிக்கப்படும் சூழ்நிலையின்போது அமைச்சர்களின்
வாகனக் கொள்வனவிற்கான
சலுகை தேவையா?
குறைந்த செலவில்
வாகனங்களை கொள்வனவு
செய்ய அனுமதிக்குமாறும்
ஊடகவியலாளர்களினால் இங்கு கேட்கப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது.
இப்படியான
நிலையில் தொலைதொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு
அமைச்சர் ஹரின்
பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்யப்
போவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த
அறிவிப்பை தனது
உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாகவே . தெரிவித்துள்ளார்
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் இந்த துணிச்சலான அறிவித்தலை ஏனைய அமைச்சர்களும் வெளியிட்டு மக்கள் மீது சுமத்தப்படவிருக்கும் வரிச்சுமையைக் குறைக்க உதவுவார்களா? நல்லாட்சி பற்றி பேசும் அமைச்சர்களின் வாய்ப்பேச்சை செயலில் காட்டுவார்களா? என மக்கள் வினவுகின்றனர்.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் இந்த துணிச்சலான அறிவிப்புக்கு மக்களால் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment