தற்போதைய அரசாங்கத்தினால் குற்றவாளிகள்
தண்டிக்கப்படுவார்கள்
என்பதை எதிர்பார்க்க வேண்டாம்!
தற்போதைய அரசாங்கத்தினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை எதிர்பார்க்க வேண்டாம்!
நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஜேவீபியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மீள்பார்வை பத்திரிகைக்கு வழங்கிய விஷேட நேர்காணல் இங்கு தரப்படுகிறது.
தற்பொழுது எமது நாடு பாரியளவில் பொருளாதார நெருக்கடியொன்றுக்கு முகம்கொடுத்துள்ளது. இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் திருப்திகரமானதாக உள்ளதா?
துவக்க காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு புரட்சிகளில் ஈடுபட்டது. பிற்பட்ட காலப்பகுதியில் புரட்சி மனப்பான்மையை விட்டொதுங்கி செயற்பாட்டரசியலில் குதித்தது. அப்புரட்சிகள் தோல்வியுறுவதற்குரிய காரணிகள் என்ன? செயற்பாட்டு அரசிய லில் குதிப்பதற்குரிய காரணம் என்ன?
மக்கள் விடுதலை முன்னணி யதார்த்தவாத அரசியலில் ஈடுபடுவதில்லை என்கின்ற தொரு விமர்சனம் மக்கள் மத்தியில் உள்ளது. எப்பொழுதும் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவை யாற்ற முடியும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. இதனால் கட்சிக்கோ அல்லது மக்களுக்கோ பலன் கிட்டப்போவதில்லை என்பதை மக்கள் விளங்கியுள்ளார்கள். மக்கள் உங்க ளிடமிருந்து எதிர்பார்க்கும் அபிலாஷை களை நிறைவேற்றுவதற்கு யதார்த்தவாத அரசியலில் குதிக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணி ஏன் இன்னும் அந்த நிலைக்கு செல்லவில்லை?
தேர்தலில் ராஜபக்ஷ தோல்வியுற்றால் 24 மணி நேரத்தில் அவரை கைது செய்வதாக நீங்கள் கூறினீர்கள். ஒன்னரை வருடங்கள் கழிந்துள்ளன எவரும் கைதாகவில்லை. காரணம் என்ன?
பாரதூரமான நிதி மோசடிகளை கண்டுபிடிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு வொன்று நியமிக்கப்பட்டது. குற்றவாளிகள் பெயர் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் தண்டனை வழங்கப்படுவதில்லை. ஆனால் 1971 இல் குற்ற நீதி விசாரணை சபை நியமிக்கப்பட்டது. அதில் ரோஹண விஜேவீர குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு வாழ்நாள் பூராக சிறைப்படுத்தப்பட்டார். அது ஏன்?
நாடு பாரதூரமானதொரு கடன் சுமையில் சிக்குண்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நாட்டை மிகப்பெரும் கடன் சுமைக்குள் தள்ளிவிட்டுள்ளார். 10 லட்சம் கோடி ரூபா கடன் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இக் கடன் தொகையை அடைப்பதற்கு இவ்வரசாங்கமும் கடன் பெறுகிறது. இச்செயலை நீங்கள் விமர்சிக்கிறீர்கள். தற்பொழுது எமது நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவித்துக்கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில் ஒரு திட்டத்தை முன்வைக்க முடியுமா?
ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற வகையில் தேசிய பிரச்சினைக்கு மக்கள் விடுதலை முன்னணி முன்வைக்கும் தீர்மானம் என்ன?
கடந்த தேரதலில் மக்கள் விடுதலை முன்னணி குறைவான வாக்கெண்ணிக்கையையே பெற்றிருந்தது. அதற்கான காரணம் என்ன? எதிர் காலத்தில் இந்நிலைமை இன்னும் பாரதூரமாக அமையுமா?
இவ்வாறு பல கேள்விகளுக்கு பதில்தருகின்றார்..
VIDEO :: https://www.youtube.com/watch?v=yyWmftecUq0

-------------------------------------------------------
சந்திப்பு : ஹெட்டி ரம்ஸி, அனஸ் அப்பாஸ்
தற்பொழுது எமது நாடு பாரியளவில் பொருளாதார நெருக்கடியொன்றுக்கு முகம்கொடுத்துள்ளது. இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் திருப்திகரமானதாக உள்ளதா?
எமது நாடு பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்களினதும் தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களினதும் செயல்பாடுகளே அதற்கு காரணமாக அமைந்துள்ளன. ஆனாலும் இப்பொருளாதார நெருக்கடிக்கு தனிநபர்களை பிரதான காரணிகளாக சுட்டிக் காட்டுவதை விட அவர்கள் பின்பற்றுகின்ற பொருளாதாரக் கொள்கையையே முக்கிய காரணியாக நோக்க வேண்டும். 67 வருட கால மாக பின்பற்றப்பட்டு வருகின்ற பொருளா தாரக் கொள்கை நாட்டை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது.
தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்ற சிறு சிறு சீர்திருத்தங்களுக்கு அப்பாலான சமூக, பொருளாதார கட்டமைப்புக்குள் பரந்ததொரு மாற்றம் அவசியப்படுகிறது. எனவே இவ் வரசாங்கம் குறுகிய காலத்திற்கு பதிலளிப்பது மற்றும் அதை குறுகிய காலப்பகுதிக்கு துணிப்படுத்தல் போன்ற திட்டங்கள் நிச்சயமாக மீளவும் ஒரு நெருக்கடியான நிலைக்கு நாட் டை தள்ளிவிடும்.
தற்பொழுது இப்பொருளாதாரம் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகள் எதைக் காண்பிக்கிறது என்றால், இன்னும் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதையும் நாட்டிற்கு புதிய பொருளாதார கொள்கையொன்று அவசியம் என்பதனையுமாகும். எனவே அரசாங்கம் முன்னனெடுக்கும் நடவடிக்கைகள் சிறுசிறு வேலைத் திட்டங்களாக இருக்குமே ஒழிய பரந்ததொரு பொருளாதார திட்டமொன்றாக அது இருக்காது.
துவக்க காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு புரட்சிகளில் ஈடுபட்டது. பிற்பட்ட காலப்பகுதியில் புரட்சி மனப்பான்மையை விட்டொதுங்கி செயற்பாட்டரசியலில் குதித்தது. அப்புரட்சிகள் தோல்வியுறுவதற்குரிய காரணிகள் என்ன? செயற்பாட்டு அரசிய லில் குதிப்பதற்குரிய காரணம் என்ன?
ஜே.வி.பி இரு பெரும் ஆயுதப் புரட்சிகளுக்கு முகம்கொடுத்தது. அப்போது நிலவிய ஆட்சி பீடமே கட்சியை புரட்சியில் தள்ளியது. 1971 இல் சமகி பெரமுன அரசாங் கமும் 1988 இறுதிப் பகுதியில் ஐ.தே.க. அர சாங்கமும் எமது அரசியல் உரிமைகளை பறித்திருந்தன. அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டிய நிலையே எமக்கு ஏற்பட்டது.
ஆனாலும் நாம் தடைசெய்யப்பட்ட அரசி யல் அமைப்பாக இருந்த நிலையிலும் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தோம். அதன் பின்னர் அவர்கள் அடக்குமுறையை கொண்டு வந் தார்கள். முற்று முழுதாகவே அடக்குமுறை களுக்கு உட்பட்டு அழிந்து போகவே எமக்கு நேரிட்டது. அதற்கு பதிலாக நாம் மாற்று வழியை தேர்ந்தெடுத்தோம்.
அவ்வடக்குமுறைகளை எதிர்கொள்ளத் தீர்மானித்தோம். அது இறுதியில் நாட்டில் சிவில் யுத்தமாக மாறியது. பொதுவாக ஒரு யுத்தத்தில் ஒரு தரப்பு வெற்றி பெரும் மற்றைய தரப்பு தோல்வியுறும். அப்புரட்சிகளில் நாம் தோல்வியுற்றோம். அதற்கு தாக்கம் செலுத்திய பல காரணிகள் உள்ளன. அது விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயம்.
மக்கள் விடுதலை முன்னணி யதார்த்தவாத அரசியலில் ஈடுபடுவதில்லை என்கின்ற தொரு விமர்சனம் மக்கள் மத்தியில் உள்ளது. எப்பொழுதும் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவை யாற்ற முடியும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. இதனால் கட்சிக்கோ அல்லது மக்களுக்கோ பலன் கிட்டப்போவதில்லை என்பதை மக்கள் விளங்கியுள்ளார்கள். மக்கள் உங்க ளிடமிருந்து எதிர்பார்க்கும் அபிலாஷை களை நிறைவேற்றுவதற்கு யதார்த்தவாத அரசியலில் குதிக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணி ஏன் இன்னும் அந்த நிலைக்கு செல்லவில்லை?
யதார்த்தவாத அரசியல் என்றால் என்ன? தற்போதைய அரசாங்கத்தோடு இணைந்து அமைச்சுப் பதவிகளையும் சந்தோசங்களை யும் பெற்று தன்னையும் தன்னைச் சூழவுள்ளோரையும் கவனிப்பது தான் யதார்த்தவாத அரசியல் என மக்கள் நினைத்துக் கொண்டுள்ளார்கள். இல்லாவிட்டால் இரு பிரதான கட்சிகளும் இணைந்து கோடிக் கணக்கில் பொதுச் சொத்துக்களை சூரையாடுவதுதான் யதார்த்த அரசியல் என மக்கள் நினைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் இக்கட்சிகள் இரண்டும் பொருளாதாரத்தை முழுமையாக அடிமட்டத்திற்கு தள்ளி, சட்டம் நீதியை நிலைநாட்டாமல் இருப்பது தான் யதார்த்தபூர்வ அரசியல். அவ்வாறுதான் ஜே.வி.பி. யும் இருக்க வேண்டும் என நினைத்திருப்பார்கள்.
இல்லை அவ்வாறு யதார்த்தம் என காட்டுகின்ற அரசியல்முறை தான் எமது நாட்டையும் மக்களையும் இக்கட்டில் தள்ளிவிட்டுள்ளது. நாம் அவ்வாறான அரசியலில் ஈடுபட வேண்டும் என்றிருந்தால் நாம் புதிதாக அரசியல் அமைப்பொன்றை உருவாக்க வேண்டியதில்லை. எமக்கும் இரண்டு கட்சிகளில் ஒன்றில் இணைந்திருக்க முடியும். நாம் புதிதாக அரசியலமைப்பொன்றை ஏன் உருவாக்கியுள்ளோம். இவ்விரு கட்சிகளும் வகிக்கின்ற பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டை ஓரங்குளமேனும் முன்னகர்த்த முடியாது என்பதை நாம் ஆழமாக நம்பியுள்ளோம்.
எனவே நாம் மாற்றுக் கொள்கையில் பயணிக்கும் அரசியல் கட்சி. அது எண்ணெய்யையும் நீரையும் சூடாக்க முடியாததை ஒத்த அமைப்பில் இக்கட்சியை சுதந்திர கட்சியுடனோ அல்லது ஐ.தே.க. வுடனோ இணைத்து விட முடியாது. ஐ.தே.க. வுக்கு முடியும் சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு. முஸ்லிம் காங்கிரஸுக்கு சு.க.வுடன் இணையவும் முடியும் ஐ.தே.க.வுடன் இணையவும் முடியும். அது போன்று தான் மற்றைய கட்சிகளின் நிலையும். அவைகளுக்கு மத்தியில் கொள்கையளவில் வேறுபாடுகள் கிடையாது. எல்லாக் கட்சிகளும் ஒரே கொள்கையில் ஒன்றிணையும் கட்சிகள். ஒரே குட்டையில் ஊரின மட்டைகள் அக்கட்சிகளே எமது நாட்டை 67 வருடங்களாக ஆட்சி செய்துள்ளன.
யதார்த்தபூர்வ அரசியல் என்பதாக கூறி எமது நாட்டை எந்த நிலையில் கொண்டு வந்து விட்டுள்ளார்கள் என்பதைப் பாருங்கள். குற்றங்களால் நிரம்பிய நாடாக, போதை வஸ்துக்கள் நிரம்பிய நாடாக, பொருளாதாரம் உடைந்துபோயுள்ள நாடாக, இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நாடாக, வேலை வாய்ப்புக்கள் உருப்பெறாத நாடாக, பிள்ளைகளுக்கு கல்வி மறுக்கப் பட்ட நாடாக உலகின் முன்னிலையில் பாரியளவு கடன்பட்ட நாடாக இந்நாட்டை அவ்வாட்சியாளர்கள் மாற்றிவிட்டுள்ளார்கள்.
நாம் இவற்றை விட்டும் விலகி மாற்று அரசியல் திசையிலேயே பயணிக்கிறோம்.எம்மை சிறு சிறு பங்குதாரர்களாக்க வேண்டாம் என நாம் மக்களிடம் வேண்டுகிறோம். எமக்கு பங்கு வேண்டாம். எமக்கு அதிகாரத்தைத் தாருங்கள். எமக்கு ஐந்து வருடங்களுக்கு இந்நாட்டை தாருங்கள். நிச்சயமாக நாம் இந்நாட்டை கட்டியெழுப்புவோம். இக் குழுக்களுடன் இணைந்து எமது வாழ்க்கையை சரிசெய்துகொள்ள முடியும். ஆனால் நாம் எமது வாழ்க்கையை சரி செய்து கொள் ளும் நோக்கத்தில் வரவில்லை. எமது சமூ கத்தை நல்லதொரு வழியில் செலுத்தவே நாம் முன்வந்துள்ளோம்.
தேர்தலில் ராஜபக்ஷ தோல்வியுற்றால் 24 மணி நேரத்தில் அவரை கைது செய்வதாக நீங்கள் கூறினீர்கள். ஒன்னரை வருடங்கள் கழிந்துள்ளன எவரும் கைதாகவில்லை. காரணம் என்ன?
நாங்கள் ஒரு போதும் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கவில்லை. உரிய முறையில் உரிய நேரத்தில் பரிசோதனைகளை நடாத்தி அவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி கொள்ளையடிக்கப்பட்ட மக்களுடைய சொத்துக்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தோம். இவ்வாட்சியாளர்கள் ஒருபோதும் இதைச் செய்யப்போவதில்லை.
சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்கு வந்த பொழுது படலந்தை ஆணைக்குழுவொன்றை நியமித்தது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தினார். ஆனால் அது கலந்துரையாடலுக்கூடாக தீர்வு காணப்பட்டது. பின்னர் அவர் காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்காக வேண்டி ஒரு ஆணைக் குழுவை நியமித்தார். அதுவும் அவ்வகையில் பேச்சுவார்த்தைக்கூடாக தீர்க்கப்பட்டது.
பாரதூரமான நிதி மோசடிகளை கண்டுபிடிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. குற்றவாளிகள் பெயர் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் தண்டனை வழங்கப்படுவதில்லை. ஆனால் 1971 இல் குற்ற நீதி விசாரணை சபை நியமிக்கப்பட்டது. அதில் ரோஹண விஜேவீர குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு வாழ்நாள் பூராக சிறைப்படுத்தப்பட்டார். அது ஏன்?
1971 இல் தமது வகுப்புக்கு எதிராக செயற்படுபவரே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். படலந்தை ஆணைக்குழுவாக இருக்கட்டும், காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்கான ஆணைக்குழுவாக இருக்கட்டும், தற்போதைய ஜனாதிபதி ஆணைக் குழுவாக இருக்கட்டும் அவ்வனைத்திலும் ஆஜர்படுத்தப்பட வேண்டியவர்கள் தமது வகுப்பிலுள்ள நண்பர்களாவர். அதனால் ஐ.தே.க.வினால் அல்லது சுதந்திர கட்சியினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை எதிர்பார்க்க வேண்டாம். அவர்கள் எல்லோரும் வகுப்புவாத நண்பர்கள்.
ஷிரன்தி ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படாமல் இருப்பதற்கு கபினட் குழுவில் வைத்து தீர்மானம் எடுக்கப்படுகிறது. அதுபோல் இவ்வரசாங்கத்திலுள்ள பெரும்பாலான பிரதி அமைச்சர்களுடைய பைல்களை முன்னெடுக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்று விசாரித்து முடிக்கப்பட்ட வழங்குகள் உள்ளன. தமது வகுப்பு நண்பர்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி அது மூடி மறைக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சித் திருடர்களுக்கு ஐ.தே.க. தலைவர்களாலோ அல்லது ஐ.தே.க. திருடர்களுக்கு சு.க. தலைவர்களாலோ தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்க வேண்டாம்.
நாடு
பாரதூரமானதொரு கடன் சுமையில் சிக்குண்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நாட்டை மிகப்பெரும் கடன் சுமைக்குள் தள்ளிவிட்டுள்ளார். 10 லட்சம் கோடி ரூபா கடன் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இக் கடன் தொகையை அடைப்பதற்கு இவ்வரசாங்கமும் கடன் பெறுகிறது. இச்செயலை நீங்கள் விமர்சிக்கிறீர்கள். தற்பொழுது எமது நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவித்துக்கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில் ஒரு திட்டத்தை முன்வைக்க முடியுமா?
நாம் முன்வைக்கின்ற திட்டத்தை ஒரு போதும் இவ்வரசாங்கத்திற்கூடாக செயற் படுத்த முடியும் என நாம் நம்புவதில்லை. நாம் எமக்குரிய வழிமுறையில் உலகப் பொருளாதார அனுபவங்களை அடிப்படையாக கொண்டு உலகப் பொருளாதார திசைவழியை ஆழமாக பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் எம்மால் தயாரிக்கப்படுகின்ற பொருளாதாரக் கொள்கையொன்றை வைத்துள்ளோம்.
ஆனால் அத்திட்டத்தை அவ்வாட்சியாளர்களுக்கூடாக சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாது அது ஏன்? மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியொன்றை எவ்வாறு கையில் எடுக்கும்? ஐதேகவும் சுகாவும் இவ்வாறுள்ள போது, மக்களுடைய அபிலாஷைகள் இவ்வாறுள்ள போது மக்கள் விடுதலை முன்னணி அதிகாரத்தை கையில் எடுக்காது. மக்கள் விடுதலை முன்னணி அதிகாரத்தை எப்போது பெறும்? நாம் அதிகாரத்தை பெறும் போது ஊழல் மோசடிகளுக்கெதிராக பலம் பொருந்தியதொரு மக்கள் சக்தி உருப்பெறும்.
இந்நாட்டில் மிகை உணவுப் பழக்கங்களுக்கு சோரம்போயுள்ள பணத்தின் பின்னால் அலைகின்ற சமூகத்திற்கு பதிலாக பொதுநலன் பற்றிச் சிந்திக்கும் சமூகமொன்று உருவாகும். ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆயுதமேந்திப் போராட விளையும் சமூகத்திற்குப் பதிலாக எல்லோர் பற்றியும் பொது மனப்பான்மையோடு நோக்கும் சமூகமொன்று உருப்பெற வேண்டும்.
எனவே மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியை எடுக்கும் என்று சொல்வது தற்பொழுது நிலவும் சமூகமுறையிலுள்ளதை விடவும் வித்தியாசமாக சிந்திக்கும் சமுதாய அமைப்பின் தோற்றத்துடனாகும். நாம் அதிகாரத்தை கையில் எடுக்கும்பொழுது பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். மக்கள் பொதுவாக சிந்திக்கத் தயார் என்றால் மக்கள் ஊழல் மோசடிகளுக்கெதிராக செயற்பட விரும்புகிறார்கள் என்றால் மக்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றத் தயார் என்றிருந்தால் தனிச் சமூக அமைப்புக்குப் பதிலாக பொது சமூக அமைப்பின்பால் அவதானம் செலுத்த தயார் என்றிருந்தால் அச்சமூகம் தற்போதைய சமூக அமைப்பல்ல இதை விட நல்லதொரு சமூகம் அத்தகைய சமூக அமைப்புக்குள்ளேயே நாம் நாம் சிந்திக்கின்ற பொருளாதார செடியை வளர்க்க முடியுமாகிறது. இச் சமூக அமைப்புக்குள் அதை செய்ய முடியாது பொருளாதார பரிணமிப்பு மாத்திரமல்ல, சமூக பொருளாதார கட்ட மைப்புக்கள் பரந்ததொரு பரிணமிப்பு அவசியம். இதற்குள் மக்களுடைய சாதாரண உரிமைகள் கிடைக்கின்ற முறை இருக்க வேண்டும். இவ்வாட்சிக்குள் அதை எதிர்பார்க்க முடியாது.
ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற வகையில் தேசிய பிரச்சினைக்கு மக்கள் விடுதலை முன்னணி முன்வைக்கும் தீர்மானம் என்ன?
மக்களுடைய உரிமைகளை வழங்குவது. எமது நாட்டில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். பல மதங்களை பின்பற்றுகிறார்கள். இவர்கள் வெவ்வேறுபட்ட காலப்பகுதியில் இங்கு வந்துள்ளார்கள். இங்கே வாழ்கிறார்கள் இங்கே மடிகிறார்கள்; இங்கே உரமாகிறார்கள்.
இலங்கை பல்லின தேசம். எல்லா இனங்களினதும் உரிமைகளை ஏற்றுக் கொள்கின்ற போதே பல்லின தேசத்தில் சமாதானத்தை பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. இவர்களுடைய மத உரிமைகள், பொருளாதார உரிமைகள், அவர்களுடைய மொழி உரிமைகள் சமூகப் பங்காளர்கள் என்கின்ற உரிமைகள் சமமாக ஏற்றுக்கொள்ளப்படாமல் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியாது.
ஒரு சிலர் வேறு அமைப்புக்களில் யோசிக்கிறார்கள். துண்டுகளை உடைத்து மூட்டி பிரித்து பெடரல் உருவாக்குவதனால் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கிறார்கள். அது இன்னும் மக்கள் மத்தியில் பிளவுகளையே உண்டுபண்ணும். மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றால் இவ்வினங்களது சம உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
கடந்த தேரதலில் மக்கள் விடுதலை முன்னணி குறைவான வாக்கெண்ணிக்கையையே பெற்றிருந்தது. அதற்கான காரணம் என்ன? எதிர் காலத்தில் இந்நிலைமை இன்னும் பாரதூரமாக அமையுமா?
குறிப்பாக கடந்த தேர்தல் ஒரு முக்கிய மான தேர்லாக அமைந்தது. மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கியிருந்தது. பொதுத் தேர்தலில் ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவார் என்ற கருத்து வலுத்திருந்தது.
எனவே ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்ற அரசியல் சக்தி ஐ.தே.க பக்கம் திசைமாறியது. வாக்கால் தெரிவாக வேண்டும் என்ற கருத்தை நாம் பலமாகக் கொண்டுள்ளோம். ஐ.தே.க. என்றாலும் நீங்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்கள் என கூறுகிறார்கள். நீங்கள் வாக்களித்தது யாருக்கு என்று கேட்டால் யானைக்கு என்பார்கள். சகல கட்சிகளினதும் விசுவாசத்தை மக் கள் விடுதலை முன்னணி வென்றுள்ளது.
அந்நம்பிக்கைக்கு அப்பால் இன்னும் சென்று மக்கள் சக்தியொன்றை உருவாக்கி மக்கள் விடுதலை முன்னணிக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் இன்னும் வரவில்லை.
--
+94 776633902
0 comments:
Post a Comment