நிந்தவூரில்  இடம்பெற்ற அர்-றப்பானியா நிறுவகத்தின்

ஹதீஸ் கலையில் பட்டப் பின் பாடநெறியினை
நிறைவு செய்தவர்களுக்கான  பட்டமளிப்பு விழா!

அர்-றப்பானியா இஸ்லாமிய கற்கைகள் நிறுவகத்தின் ஹதீஸ் கலையில் பட்டப் பின் பாடநெறியினை நிறைவு செய்த 14 உலமாக்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்   பெற்றது
இந்நிகழ்வானது அர்-றப்பானியா இஸ்லாமிய கற்கைகள் நிறுவகம், நிந்தவூர் பாத்திமா மகளிர்  அரபுக் கல்லூரி ஆகியவற்றின் அதிபர் மெளலவி அல்-ஹாபில் ..அலி அஹமட் (ரஷாதி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் இந்தியாவின் திருச்சி ஜாமியா அன்வருல் உலும் அரபுக் கல்லூரியின் முதல்வரும், முந்தகப் அல்-ஹதீஸ் தமிழ் மொழிபெயர்ப்புக் குழுவின் தலைவருமான மெளலான மெளலவி அல்-ஹாபில், அல்-ஹாரி, றூஹுல் ஹக் முப்தி, (ரஷாதி, ஹாசிமி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஹதிஸ் கலையில் பட்டப்பின் கல்வி பாடநெறியினை பூர்த்தி செய்த 14 உலமாக்களுக்கான சான்றிதழ்களையும் பொதிகளையும் வழங்கிவைத்தார்
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக நிந்தவூரின் இதுகாலவரை பட்டம் பெற்றுவந்த 70 மூத்த, இளைய உலமாக்கள், ஹாபில்களுக்கான பொதிகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். பட்டமளிப்பு விழாவின்போது தலைசிறந்த உலமாக்களும், அரபுக் கல்லூரிகளின் அதிபர்களும், மற்றும் அதிதிகளும் கலந்து கொண்டனர்.
நிந்தவூரில் இடம்பெற்ற ஹதீஸ் பின் பட்டப்படிப்பு டிப்ளோமா கற்கை நெறியினைப் பூர்த்தி செய்தவர்களுக்கான இக்கெளரவிப்பு நிகழ்வானது நிந்தவூர் வரலாற்றில் மிக முக்கியமான சரித்திர நிகழ்வாகக் கருதப்பட்டது.

இந்நிகழ்வில் நிந்தவூரில் முதலாவது முப்தி பட்டம் பெற்ற மெளலவி எம்.எச்.மின்ஹாஜ் அவர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top