பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை
அரசாங்கம் விசேடமாகக் கவனிக்க வேண்டும்
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர்
(எம்.எஸ்.எம்.சாஹிர்)
வெள்ள
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை
விசேடமாகக் கவனிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை
எடுக்கவேண்டுமென முன்னாள் முஸ்லிம் சமய கலாசார
அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
என்.எம். பெரேரா
நிலையத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பின்
போதே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்
அவர் தொடர்ந்து
பேசுகையில்,
அண்மையில்
ஏற்பட்ட வெள்ள
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுள் ஊடகவியலாளர்களும்
அடங்குவர். அவர்களின்
புகைப்படக் கமெராக்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடிக்கப்பட்டு
சென்றுவிட்டது. நாட்டில் நடக்கின்ற எல்லா விடயங்களையும்
பற்றி எழுதுகின்ற,
எழுதிய அவர்கள்
இப்பொழுது நடு
ரோட்டில் சிக்கித்
தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஊடகவியலாளர்களை விசேடமாகக் கவனிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இந்த
நாடு இப்பொழுது
ஒரு அழுக்கு
மேடையாக மாறிவிட்டது.
எல்லா இடங்களிலும்
குப்பை கூளங்கள்
குவிந்த வண்ணமுள்ளன.
குறிப்பாக கொலன்னாவைப்
பிரதேசத்தில் இதனால் மக்கள் அவதியுறுகின்றார்கள். நோய்வாய்ப்படுகின்றார்கள். அரசாங்கம்
தகவல் எடுத்துதான்
நிதியை செலவிட
வேண்டும் என்ற
நியதி இருப்பதால்,
அரசாங்க ஊழியர்கள் முன்னைய
காலங்களைப் போன்று, எங்களுடைய காலங்களைப் போன்று
நிதியை அளிப்பதற்கு
முன்வருகிறார்கள் இல்லை. இது துரதிஷ்டவசமான விடயம்.
ஆகவே
பேச்சோடு நின்று விடாமல் உடனடியாக நடைமுறையிலும்
இதனை நிறைவேற்ற
வேண்டும். வீடுகளை
இழந்தவர்களுக்கு வீடுகளை சீக்கிரம் கட்டிக் கொடுக்க
வேண்டும். பிரதம
அமைச்சர் கூறியிருக்கின்றார்கள்
முன்னைய ஆட்களுக்கும்
கட்டித் தருவோம்
என்று. முன்னைய
ஆட்களுக்கும் கட்டிக்கொடுக்கத்தான் வேண்டும்.
அது ஒரு
புறம்.இப்பொழுது
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கட்டிக்
கொடுக்க ஆவன
செய்ய வேண்டும்.
முன்னைய ஆட்களுக்கு
கொடுத்த வாக்குறுதி
போல் இருக்கக்
கூடாது.
தேர்தலை
அடுத்த வருடம்
வைக்க முடியாது
என்று உள்ளூராட்சிமன்ற
அமைச்சர் கூறுகிறார்.
ஒவ்வொரு நாளைக்கும்
ஒவ்வொரு கூற்றை
அவர் விடுக்கின்றார்.
சாக்குப்
போக்குச் சொல்லாமல்
உடனடியாகத் தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளைத்
தெரிவு செய்வதற்கு
மக்களுக்கு உரிமையை வழங்கி அதன் மூலமாக
அனர்த்தங்களால் பாதிப்புக்குள்ளானோருக்கு அப்பகுதியில்
உள்ள மக்களால்
தெரிவு
செய்யப்பட்ட பிரதிநிதிகள் உடனடியாக
வெள்ளம் மற்றும்
மண் சரிவினால்
பாதிக்கப்பட்டோரை நேரில் சென்று உள்ளார்ந்த
ரீதியில் சேவை செய்வதற்கு அவர்களுக்கு வழி
வகை செய்ய
வேண்டும்.
கூட்டுமுன்னணி
உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று
அரசிடம் சவால்
விடுத்துள்ளது.
வட
மாகாண சபை
வேறொரு அரசியல்
சாசாணத்தை நிறைவேற்றியுள்ளது.
அதாவது அவர்களுக்கு
என்று ஒரு
பகுதி முஸ்லிம்களுக்கும்
ஒரு பகுதி
இருப்பதாக சொல்லியிருக்கின்றது.
இந்த மாதிரியான
இனிப்பு மிட்டாய்களைத்
தின்பதற்கு இனிமேல் முஸ்லிம்கள் ஏமாற்றுப்
பேர்வழிகள் என்று டிஎன்ஏ கருதக் கூடாது.
அதாவது வடக்கு
கிழக்கை இணைப்பதற்கு
இந்த நாட்டு
முஸ்லிம்கள் எதிர்ப்பு. கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்
அனைவரும் எதிர்ப்பு. எங்களுடைய
முன்னைய தலைவர்கள்
வழி காட்டிய
வழியில்தான் நாங்கள் செல்ல வேண்டும். இந்த
நாடு ஒன்றுபட்ட
நாடு. எந்த
வகையிலும் பிரிக்க
முடியாது, கூறு
போட முடியாது.
என்ற நிலையைத்தான்
முஸ்லிம்கள் எப்போதும் கொண்டிருக்கின்றார்கள்.
3/4 பங்கு முஸ்லிம்கள்
சிங்களப்
பகுதியிலே வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நன்மை
கருதி முன்னைய
அரசியல் தலைவர்கள்
செய்வது போன்று
நாம் கட்டாயம்
செய்ய வேண்டும்.
இப்பொழுது அரசாங்கம்
கொடுத்த வாக்குறுதிக்கெல்லாம்
மாறாக வேலை
செய்கின்றது.
டிலான்
பெரேரா ஸ்ரீ.சு.க. பேச்சாளர் சொல்லிருக்கின்றார்
இன்னொரு வருடத்தில்
இந்த விவாகம்
- திருமணம் முடிந்து விடும் என்று. விவாகம் முடியும்
என்று கணவனும்
மனைவிக்கும் தெரிந்து கொண்டால் எவ்வாறு இருவரும்
ஒரு அறையில்
சேர்ந்து வாழ்வது.
இந்த நிலைதான்
ஐ.தே.க வில் இருந்து ஸ்ரீ.சு.க வில் இணைந்து
கொண்டவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அந்த குடும்பத்தை இப்போது
நடத்த முடியாத
நிலைதான் ஏற்பட்டிருப்பதாக
டிலான் பெரேரா நன்றாக
எடுத்துச் சொல்லியிருந்தார்.
எனவே மஹிந்த
ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் பலமிக்க
ஒரு கூட்டு முன்னணி அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே டிலான் பெரேரா போன்றவர்கள்
அங்கிருந்து வந்து ஸ்ரீல. சு. கட்சி
கூட்டு முன்னணியில் இணைந்து
கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
என்றார்.
0 comments:
Post a Comment