சாய்ந்தமருதுமாளிகைக்காடு பிரதேசங்களில்
ஸகாத் செயற்பாடுகளை வலுவூட்டல்;




ஸகாத் சேகரிப்பு

சாய்ந்தமருது பைத்துஸ்-ஸகாத் நிதியம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டு தசாப்தங்கள் அடைந்த நிலையில் இதன் சேவைகள் தொடர்ச்சியாக நடை பெறுவது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரிய விடயம்.
கடந்த இரண்டு தசாப ;தங்களில் பணமாகக் கிடைத்த ஸகாத்தின் பெறுமதி பணவீக்கத்திற்கேற்ப அதிகரித்துள்ள போதிலும் நெல்லாகக் கிடைத்த ஸகாத் தொடர்ச்சியாக ஒரே மட்டத்தில் காணப்படுகின்றது. ஸகாத் வழங்குபவர்களினது தொகையும் சராசரியாக 150 எனும் மட்டத ;திலேயே காணப்படுகின்றது.எனவே பைத்துஸ்-ஸகாத ; நிதியத்தின் செயற்பாடுகள் மேலும் வலுவூட்டப ;பட வேண்டும்.
சாய்ந்தமருதுமாளிகைக்காடு பிரதேசங்களில் ஸகாத் வழங்கத் தகுதியானவர்கள் சுமார் 1500 பேர் உள்ளனர். இவர்களை பின்வருமாறு இனம் காணலாம்.
மாதாந்த ஊதியம் பெறுவோர்---------------------2000
வர்த்தகர்கள்-------------------------------------------------1000
சுய தொழில் முயற்சியாளர்கள்-------------------1000
நெற்காணி உரிமையாளர்கள்------------------------750
மீன் பிடி வள்ள உரிமையாளர்கள்---------------250
மொத்தம்………………………………………………   5000
              மொத்தத்தில் 30 சத வீதம் 1500

ஸகாத் வழங்கத் தகுதியானவர்கள் சுமார் 1500 பேர் இருந்தும் சராசரி 150 பேர் மட்டுமே (10மூ) ஸகாத் வழங்கி வருகின்றனர்;. இதனை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆய்வுகளின் அடிப ;படையில் செய்யப்பட வேண்டும். ஸகாத் கொடுப்பதற்கான ஆர்வத்தை கூட்டுவதற்கான அறிவூட்டல்கள் செய்யப்பட வேண்டும். நவீன பத்வாக்களின் அடிப்படையில் ஸகாத் கொடுக்க வேண்டிய சொத்துக்கள்,வருமானங்கள் போன்றவற்றை இலகுவாக இனம் கண்டு கணக்கிடுவதற்கு உதவுதல் வேண்டும்.

ஸகாத் விநியோகம்

இலங்கையில் பொதுவான வறுமைச் சுட்டி 6.5 சத வீதமாக உள்ள நிலையில் இலங்கை முஸ்லிம்களின் வறுமைச் சுட்டி 21 சத வீதமாக உள்ளது. இதற்கான காரணிகளில் பிரதானமானது திரட்டப;படும் ஸகாத்தில் 90 சத வீதம் முதலீட்டுத் தேவைக்காக அல்லாமல் நுகர்வுத் தேவைக்காக வழங்கப்படுவதாகும். எனவே முதலீட்டுத் தேவைக்காக ஸகாத் வழங்கினால்தான் எதிர்காலத்தில் அதைப் பெறுபவர்கள் தாங்களும் ஸகாத் வழங்குபவர்களாக மாறுவார்கள். அதே வேளை அதனை முறைகேடாக பயன்படுத்துபவர்களிடம் (சுபகாக்களிடம்) கொடுததால் வெற்றி கிடைக்காது.

முதலீட்டு உதவிகள் வெற்றி பெற பின்வரும் விடயங்கள் தேவை

திறமையான திட்டமிடலும் தீர்மானம் எடுக்கும் ஆற்றலும்
போதிய முதலீடு (ஸகாத்தை தூவி விடுவது வீண் விரயம்)
கூடிய முதலீட்டை 20-30 பக்கீர்,மிஸ்கீன்களுக்கு கூட்டாக தொழில்   ஆரம்பிக்கபயன்படுத்தல்.
திறமையான முகாமைத்துவம்
தூய்மையான எண்ணம் (இக்லாஸ்)
அர்ப்பணம், தியாகம்
நவீன யுக்திகள் பயன் படுத்தல்
வறுமையை ஒழித்தல்,இஸ்லாத்தைப் பரப்புதல் என்ற இரு அம்சம்களும் ஸகாத்தின் பிரதான நோக்கங்களாக இருப்பதால் இந்நோக்கத்தை மையமாகக் கொண்டு 'பி பீலுள்ளாஹ்' 'முஅல்லபதுல் குலூப்' என்பவற்றிற்குரிய பங்குகளை ஆய்வுகள் செய்தல்,அறிவூட்டல் போன்ற பல் வகை செயற்பாடுகளுக்கு பயன் படுத்தலாம்.
'அல் காரிமூன்' ங்கிலிருந்து கடன் சுமையால் ஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது போல் வசதியற்றவர்களுக்கு வட்டி இல்லாக் கடன ; கொடுக்க இப்பங்கைப் பயன்படுத்த முடியும்.
ஈமானிய பின்புலமும் தொழுகையை ஒழுங்காக கடைப்பிடிக்கும் பழக்கமும் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸகாத் விநியோகிக்கப்பட வேண்டும்.

ஸதகா, ஸகாத்துல் பித்ர் கூட்டாக விநியோகம்

ஸகாத் போன்று ஸதகாவையும் சேகரித்து விநியோகிப்பதற்கான போதிய கரிசனை காட்டப் படவேண்டும். அதனையும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் கூட்டாக விநியோகிப்பதன் மூலம் கூடிய வறிய மக்களுக்கு உதவி ஊரில் யாசகம் கேட்டுச் செல்வோரை தடை செய்ய வேண்டும்.

ஸகாத் அமைப்புகளுடன் தகவல் பரிமாற்றம், கூட்டு முயற்சி

உலகளாவிய ரீதியில் ஸகாத் கமிட்டிகளை ஒன்றிணைக்கும் 'பைத்துல் ஸகாத் அல் ஆலமியா' எனும் அமைப்பு, இலங்கை தேசிய ஸகாத் குழு மற்றும் கிழக ;கு மாகாணத்தில் இயங்கும் ஸகாத் நிதியங்கள் ஆகியவற்றுடன ; இணைந்து செயற்படுதலும் தகவல்களைப் பரிமாற்றம் செய்தலும் வேண்டும்.

டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்

முன்னாள் ; தலைவர், பைத்துஸ் ஸகாத், சாய்ந்தமருது
01.06.2016


பி.கு: மேற்படி கருத்துக்கள ; சென்ற 2016.04.23ம் திகதி தேசிய சூறா சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஸகாத் தொடர்பான மகாநாட்டில் அஷ-ஷெய்ஹ் என்.எம்.எம்.மிப்லி, ஷ்-ஷெய்ஹ் எம்.ஏ.எம்.. மன்சூர், அஷ ஷெய்ஹ் எஸ்.எச்.எம். பழீல் ஆகியோரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைத் தழுவியவையாகும.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top