கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக
உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மனு!


சம்பூர் பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமத் நடந்துக் கொண்டமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமைகள் மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கடற்படை அதிகாரி ஒருவரை முதலமைச்சர் திட்டியுள்ளதுடன், அவரை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துக்கொண்டமைக்கு எதிராகவும் சட்டத்தரணியான பீ.லியன ஆராய்ச்சி மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த நிகழ்வில் கடற்படை அதிகாரியை அவமானத்திற்கு உள்ளாக்கியதோடு பாடசாலை மாணவி ஒருவரின் நன்மதிப்புக்கும் பாதிப்பு வரும் வகையில் நடந்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் இந்தச் செயலால் தனிப்பட்ட ரீதியில் மட்டுமல்லாது பொதுமக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் குறித்த மனுதாரரான வக்கீலால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இழந்த கௌரவத்தை மீண்டும் பெற முடியாது என்றும் எனவே குறித்த சம்பவம் தொடர்பில் சரியான தீர்ப்பினை வழங்கக் கோரி அவரது மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top