2016-17-ம்
ஆண்டுக்கான உலகின் சிறந்த
பல்கலைக்கழகங்கள்
பட்டியலில்
கொழும்பு பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளது
2016-17-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த
980 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இலங்கையிலிருந்து கொழும்பு பல்கலைக்
கழகமும் இடம்பிடித்துள்ளது.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த "டைம் ஹையர் எஜுகேஷன்' பத்திரிகை, 2016-17-ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது
இப்பட்டியில், முதல் இடத்தில்
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும்,
5 முறை முதலிடம்
பிடித்த கலிபோர்னியா
தொழில் நுட்ப
பல்கலைக்கழகம் 2-வது இடத்திலும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்
3-வது இடத்திலும்
உள்ளன.
இப்பட்டியலில்
முதல் 800 இடங்களில் கொழும்பு பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.
மலேசியா, எகிப்து, துருக்கி,இந்தோனிசியா, சவூதி அரேபியா, குவைத்,
ஈரான்,ஜோர்தான், ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களும் 800 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன
தெற்காசியாவிலிருந்து
மொத்தம் 39 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் இந்தியாவிலிருந்து
அதிகபட்சம் 31 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.
முதல் 800 இடங்களில்
இந்தி யாவிலிருந்து
19 பல்கலைக்கழகங் கள் இடம்பிடித்துள்ளன.
.
0 comments:
Post a Comment