ஐ.நா., சபையில் காஷ்மீர் மக்களின் அவல நிலை குறித்து

கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்

காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரின் அட்டகாசம் குறித்தும் அந்த  மக்களின் அவல நிலை பற்றியும் ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
காஷ்மீரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் அங்கு ஊரடங்கு அமுலில் உள்ளது.
உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 20 ராணுவ வீரர்களை கொன்றதை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
இந்தியாவுடன் பாகிஸ்தான் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது. நாங்கள் ஒரு மைல் தூரம் அடி முன்னெடுத்து வைத்தாலும், இந்தியா பின்னோக்கி செல்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை விதித்து இந்தியா முட்டுக்கட்டை போடுகிறது.

பாகிஸ்தானே தீவிரவாதிகளால் பிரச்சினைகளில் சிக்கி உள்ளது. அவர்களால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் தீவிரவாதிகளை தூண்டி விடுவதாக இந்தியா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. இது தவறான குற்றச்சாட்டு.

காஷ்மீரை பொறுத்தவரை அந்த பகுதியை இந்தியா சட்டம் விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அங்கு சுதந்திர போராட்டம் நடந்து வருகிறது. காஷ்மீர் மக்கள் தங்களை யார் ஆள்வது என்பது குறித்து சுயநிர்ணயம் செய்து கொள்ள உரிமை இருக்கிறது. இதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள். அங்கு நடப்பது சுதந்திர போராட்டம்.

புர்கான்வானி (இந்திய படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி) காஷ்மீரின் இளைஞர்களின் தலைவர். அவர் சுதந்திரத்திற்காக போராடியவர். ஆனால் அவரை இந்திய ராணுவம் கொலை செய்துவிட்டது. அவர் தனது மக்களுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார்.


* பயங்கரவாதத்தால் பாகிஸ்தானும் நிறைய பாதிக்கப்பட்டுள்ளது.
* சில வெளிநாடுகள் பாக்., மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, ஆயுத உதவி அளிக்கின்றன.
* பயங்கரவாதம் பாக்.,கில் இருந்து உருவாகவில்லை. பாக்.,கிற்கு வெளியில் இருந்து தான் உருவாகிறது.
* பயங்கரவாதத்தை பாகிஸ்தானும் எதிர்த்து போரிட்டு தான் வருகிறது.
* பாகிஸ்தானின் ஸ்திரமான வளர்ச்சிக்கு வெளிநாட்டு படைகள் உதவ வேண்டிய அவசியம் இல்லை.
* இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாக்., விரும்புகிறது.
* இந்தியா எங்களுடனான பேச்சுவார்த்தையில் சில நிபந்தனைகள் விதிக்கிறது. அவை ஏற்க கூடியது அல்ல.
* பேச்சுவார்த்தை பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், இரு நாட்டிற்கும் சாதகமான பேச்சுவார்த்தையை இந்தியா விரும்புகிறது. அதற்கு சாத்தியமில்லை.
* காஷ்மீர் பங்கீட்டிற்கு தீர்வு காணப்படாத வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படாது.
* காஷ்மீர் மக்கள் மீது இந்தியா நடத்தியுள்ள கொடூர தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை ஐ.நா., பொதுச்செயலரிடம் பாக்., வழங்கியுள்ளது.
* பர்ஹான் வானி இந்திய படைகளால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது.
* பர்ஹான் வானி காஷ்மீர் மக்களின் நினைவு சின்னமாக உள்ளார்.
* காஷ்மீர் இந்தியாவில் இருந்து விடுபட வேண்டும்.
* காஷ்மீரில் நடந்த வன்முறைகள் குறித்து சர்வேதச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் காஷ்மீர் கலவரத்திற்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்.
இவ்வாறு நவாஸ் பேசியுள்ளார்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top