ஹிலாரி - டிரம்ப் இடையே இன்றைய நேரடி விவாதம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் - ஹிலாரி கிளிண்டன் இடையேயான முதல் நேரடி விவாதம் இன்று தொடங்கியது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவ., 8ல் நடைபெறுகிறது. இதில் களம் காண குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஹாப்ஸ்ட்ரா பல்கலையில், ஹிலாரி - டிரம்ப் இடையேயான முதல் விவாத நிகழ்ச்சி தொடங்கியது. நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் விவாதம் 90 நிமிடங்கள் நடைபெற்றது.
விவாதத்தில் ஹிலாரி பேசியதாவது:
* குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படும்
* நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் அமல்படுத்தப்படும்
* புதிய திட்டம் மூலம் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
* பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே டிரம்ப் ஆதரவளிப்பார்
* வரிச்சலுகைகளை கொண்டு வருவதன் மூலம் நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும்
* ‛நான் தவறு செய்து விட்டேன்' ஈமெயில் விவகாரம் குறித்து ஹிலாரி வருத்தம்
விவாதத்தில் டிரம்ப் பேசியதாவது:
* அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனர்களும், மெக்ஸிகர்களும் தட்டிப் பறிக்கின்றனர்.
* அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும்
* வெளியுறவு அமைச்சராக இருந்த போது ஹிலாரி அமெரிக்காவின் நிலையை உயர்த்தவில்லை
0 comments:
Post a Comment