மாநகர சபை அந்தஸ்து பெற்றிருக்கும்
பிரதேசத்தின் காட்சிகள்!
இந்த அவல் நிலையான காட்சிகள் எங்கு ந்டக்கின்றது என்று யோசிக்கின்றீர்களா?
இப்படியாக குப்பைகள் வீதியில் சிதறுண்டு கிடப்பதும் கட்டாக்காலி மாடுகள்
அதனைக் கிளறிக் கொண்டிருப்பதையும் உள்ளுராட்சி மன்றங்களின் ஆரம்ப நிலையில் உள்ள
பிரதேச சபைக்குட்பட்ட ஒரு வசதிகள் அற்ற கிராமத்தில் அல்ல.
உள்ளூராட்சி மன்றங்களின் தர வரிசையில் உச்சத்தில் மதிக்கப்படும் மாநகர சபை
அந்தஸ்து பெற்றிருக்கும் கல்முனை மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட சாய்ந்தமருது
மாநகரத்தின் பிரதான வீதியில் அதுவும் ஒரு முக்கிய இடமான பொது நூலகம், பாடசாலை,
தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபைக் காரியாலயம் என்பன போன்ற அலுவலகங்கள்
அமைந்துள்ள பிரதான பாதையில்தான் இந்த
அசிங்கங்கள் அப்புறப்படுத்தப்படாமலும் கட்டாக்காலி மாடுகள் அந்த அசிங்கங்கங்களை
போக்கு வரத்து செய்யப்படும் பாதை எங்கும் கிளறுவதையும் நேற்று (24..09.2016)
சனிக்கிழமை எம்மால் காணமுடிந்தது.
முதலாவதாக இப்படியாக குப்பைகளை கண்டபடி வீதியில்
விசிறும் அப்பிரதேச மக்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.. இவர்கள் தமது இப்படியான
செயல்பாட்டை நிறுத்த வேண்டும்
அடுத்ததாக கல்முனை மாநகர சபை நிர்வாகம் இம்மாநகர
சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை சீராக அகற்றுவதற்கு இன்னும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை
என்பதையே இப்படியான காட்சிகள் நிருபிக்கின்றன.
கல்முனை மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியர்களை அதிகாலையில்
கடமைக்கு வருவதற்கான ஒழுங்குகளை செய்து பிரதேசத்தில் காணப்படும் கழிவுகளை மக்கள்
நடமாட்டத்திற்கு முன் அப்புறப்படுத்த முடியும்.
எமது நாட்டில் சில சபைகளால் அன்றாடம் கடைகள்
அமைந்துள்ள பிரதான வீதிகள் மட்டும் கடைகள் மூடப்பட்ட பின்னர் இரவு நேரங்களில்
கழிவுகள் அகற்றப்படுவதையும் காணமுடியும். புத்தளத்தில் இவ்வாறு இரவு நேரங்களிலும்
கழிவுகள் அகற்றப்பட்டதை எங்களால் கண்ட அனுபவம் உண்டு. இதற்கென கடமை செய்யும் ஊழியர்களை பிரித்து Shift அடிப்படையில் கடமைகளை பகிர்ந்தளிக்க முடியும்.
அடுத்ததாக பொது மக்கள் கழிவுகளை வீதியில் விசிறாமல்
கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்து கழிவுகளை போடுவதற்கான கழிவுகளைச் சேகரிக்கும் பாரியக் குப்பைத்
தொட்டிகளை கழிவுகள் அதிகம் விசிறப்படும்
இடங்களை அடையாளம் கண்டு ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
அதே நேரம் கட்டாக்காலி மாடு, கட்டாக்காலி நாய்களின் நடமாட்டத்தையும்
கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் கல்முனைப் பிரதேசம் மாநகர சபை அந்தஸ்துக்கான
தகுதிக்கு உட்பட்டிருக்கும் இல்லையேல் கல்முனைப் பிரதேசம் கழிவுகள் நிறந்த
................ பிரதேசமாகவே கருத முடியும்.
0 comments:
Post a Comment