' எங்களுக்கும்
குடிநீர் வேண்டும்'
'நீரைப் பெற்றுக் கொள்வது எங்கள் உரிமை'
ஏறாவூர்ப்பற்று பதுளை
வீதியை அண்டியுள்ள கிராம மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு
ஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டியுள்ள கிராம
மக்கள் இன்று
28ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு
நகருக்கு வந்து
குடிக்கும் நீரைப் பெற்றுக் கொள்வது எங்கள்
உரிமை ‘எங்களுக்கும்
குடிநீர் வேண்டும்’
என்று கவன
ஈர்ப்புப் போராட்டம்
நடாத்தினர்.
ஏ 5 மட்டக்களப்பு – பதுளை
வீதியில் உள்ள
கொடுவாமடு தொடக்கம்
மங்களகம வரையான
கிராமங்களில் நிலவும் மிகவும் மோசமான வரட்சியால் பாதிக்கப்பட்டு
குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகின்ற போதிலும்
அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை
என மக்கள்
தமது அங்கலாய்ப்பை
வெளியிட்டனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அங்கிருந்து பேரணியாக மாவட்டச் செயலகம்வரை சென்றனர். இதன்போது, தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட மக்கள் கையளித்தனர்.
மகஜரின்
பிரதிகள் ஜனாதிபதி,
கிழக்கு மாகாண
முதலமைச்சர், நகர திட்டமிடல் மற்றும் நீர்
வழங்கல் அமைச்சர்,
ஏறாவூர் பற்று
பிரதேச செயலாளர்,
பிரதேச சபை
செயலாளர், உள்ளுராட்சி
உதவி ஆணையாளர்,
தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்புச்
சபை அதிகாரிகள்
ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள
மக்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், 'வரட்சியான காலத்தில் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதுடன், 6 கிலோமீற்றருக்கும் அப்பால் சென்றே தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும் நிலைமை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கரடியனாறுக் கிராமம் முதல் மங்களகமக் கிராமம் வரையான மக்கள் தொடர்ச்சியாக தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்குவதாகவும் குளிப்பதற்குக் கூட பஸ்களில் செங்கலடிப் பிரதேசத்துக்குச் சென்று குளிக்கின்றோம்' என்றனர். 'வரட்சியான இக்காலத்தில் பிரதேச சபையால் நாளாந்தம் பவுசர் மூலம் வழங்கப்படும் தண்ணீர்; போதாமையாகவுள்ளது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், தொழிக்குச் செல்வோர் உட்பட அனைவரும் பாரிய சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். ஆகவே, எங்களுக்கு நிரந்தரமாக தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்' எனவும் அவர்கள் கூறினர்.
0 comments:
Post a Comment