கல்முனைக்கு மேலதிகமாக
கல்முனை மத்தி வலயக்கல்வி அலுவலகம்!
கல்முனை முஸ்லிம்களையும் தமிழர்களையும்
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரித்துவிட்டார்
கல்முனை பிரதேச புத்திஜீவிகள் தெரிவிப்பு
பொத்துவிலுக்கு
புதிய வலயக்
கல்வி அலுவலகமும்,
கல்முனைக்கு மேலதிகமாக கல்முனை மத்தி வலயக்கல்வி
அலுவலகமும் உருவாக்குவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை
இன்று மாலை
அனுமதி வழங்கியுள்ளதாக
தெரியவருகின்றது.
கிழக்கு
மாகாண கல்வி
அமைச்சர் தண்டாயுதபாணி
கொண்டு வந்த
பிரேரணையை ஏற்றுக்கொண்டே
அமைச்சரவை இந்த
அனுமதியை வழங்கியுள்ளது.
பொத்துவிலுக்கு
வலயக் கல்வி
அலுவலகம் வழங்கியதில்
நியாயப்பாடு உள்ளது. அங்கு ஏற்கனவே உப
வலயக்கல்வி அலுவலகம் இயங்கி வருகின்றது. அத்தோடு
அக்கரைப்பற்றுப் பிரதேசத்திற்கும் பொத்துவிலுக்கும்
இடையில் சுமார்
40 கிலோ மீற்றர்
தூரத்தில் இருப்பதால்
அங்கு தனியான
வலயக் கல்வி
அலுவலகம்இன்றியமையாததாகும்.
ஆனால்
கல்முனை கல்வி
அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகள் தமிழ்,முஸ்லிம் என்ற
வேறுபாடுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் காணப்படுகின்றது. அங்கு மேலும் ஒரு
தனியான வலயக்
கல்வி அலுவலகம்
தேவையில்லாததாகும். கல்முனை வலயக்கல்வி
அலுவலகத்தின் செயற்பாடுகள் இன,மத பேதமின்றி
மிகச்சிறப்பான முறையில் இடம்பெறுகின்றது.
ஒரு
சில இனவாதிகளின்
அழுத்தத்திற்கு அடிபணிந்து கல்வியினூடாக மீண்டும் இனவாதத்தை
ஆரம்பிப்பதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையின் தீர்மானம்
வழிகோலியுள்ளது.
இனவாதமில்லாத
நாட்டைக்கட்டியெழுப்புவதுதான் நல்லாட்சியின் பிரதான
நோக்கமென்று அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில்
கல்வி அலுவகத்தை
உருவாக்கி இனவாதத்திற்கு
நல்லாசி வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின்
தலைநகராகப் பார்க்கப்படும் கல்முனை மாநகரத்தை துண்டாடி
நாசப்படுத்த நினைக்கும் இனவாதிகளின் செயற்பாட்டிற்கு கிழக்கு
மாகாண முதலமைச்சர்
ஹாபீஸ் நஸீர்
அஹமட் ஆதரவு
தெரிவித்துள்ளதுடன் கல்முனை முஸ்லிம்களை
காட்டிக்கொடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் ஸ்தாபகத்
தலைவர் மர்ஹூம்
எம்.எச்.எம்.அஸ்ரப்
அவர்களின் தயாகமான
கல்முனை மண்ணுக்கு
அவரின் ஆளுமையினால்
உருவாக்கப்பட்ட கட்சி தலைமை வகிக்கும் கட்சியின்
முதலமைச்சரினாலும், அந்தக் கட்சியின்
மாகாண சபை
உறுப்பினர்களினாலும் வரலாற்றுத் துரோகம்
இழைக்கப்பட்டுள்ளது.
கல்முனை
மண்ணை பிரதிநிதித்துவப்படுத்தும்
இரண்டு மாகாண
சபை உறுப்பினர்களான
கே.எம்.ஜவாத், ஆரிப்
சம்சுதீன் ஆகியோர்
கிழக்கு மாகாண
சபையில் அங்கத்துவம்
பெற்றிருக்கின்ற நிலையில் இவ்வாறான ஒரு அனுமதி
வழங்கப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய
விடயமாகும்.
இதேவேளை,
கிழக்கு மாகாண
சபை உறுப்பினர்களான
கே.எம்.ஜவாத் மற்றும்
ஆரிப் சம்சுதீன்
இருவரும் முதலமைச்சர்
நஸீர் அஹமட்டின்
தீர்மானத்திற்கு ஆதரவு இல்லையென்றால் உடனடியாக அறிக்கை
விடுவதுடன் கல்முனை மேலதிக வலயக் கல்வி
அலுவலகம் ஏற்படுத்துவற்கான
செயற்பாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்
கல்முனை பிரதேச
மக்கள் வேண்டுகோள்
விடுக்கின்றனர்.
முஸ்லிம்களின்
முகவெற்றிலையான கல்முனை மண்ணுக்கு கிழக்கு மாகாண
முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் மாகாண
அமைச்சர்கள், மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள்
வரலாற்றுத் துரோகம் செய்துவிட்டார்கள் எனக் கவலை
தெரிவிக்கப்படுகின்றது.
- சம்சுதீன் அறூஸ்
0 comments:
Post a Comment