ஹிலாரி
- டிரம்ப் இடையே முதல் நேரடி விவாதம்
இலங்கை
நேரப்படி நாளை காலை இடம்பெறுகிறது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்
- ஹிலாரி கிளிண்டன் இடையேயான நேரடி விவாதம் இன்று (26-09-16) இரவு நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, நவ., 8ம் திகதி தேர்தல்
நடக்கிறது. இதில் களம் காண குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும்
போட்டியிடுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இரு கட்சிகளின்
வேட்பாளர்களிடையே நேரடி விவாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விவாதம் டிவியில்
நேரடியாக ஒளிபரப்பாகும்.
நியூயார்க்கில் உள்ள ஹாப்ஸ்ட்ரா பல்கலையில், இவர்களிடையேயான முதல் விவாத நிகழ்ச்சி அமேரிக்க
நேரப்படி இன்று இரவு நடைபெறுகிறது. நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் நடைபெறும் இந்த
விவாதம், இலங்கை நேரப்படி
நாளை (செவ்வாய்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்கும். 2வது விவாதம் அக்.,9ம் திகதியும்,
இறுதி விவாத நிகழ்ச்சி
அக்.,19ம் திகதியும்
நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment