ஏறாவூர் இரட்டைக் கொலை:

மூன்று சந்தேக நபர்களுக்கு நாளை வரை விளக்க மறியல்

இரண்டு பேர் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணை

ஏறாவூர் இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று பேரை நாளை (22.9.2016) வியாழக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறும் ஏனைய இருவரை அடுத்த 24 மணித்தியாலயங்கள் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நிதிமன்ற நீதிபதி எம்..எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்

ஏறாவூர் முகாந்திரம் வீதியை அன்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 11.9.2016 அன்று தாயும் மகளும்; கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களும் இன்று(21.9.2016) புதன்கிழமை ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்..எம்.றிஸ்வி முன்னிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் வைத்து ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட பிலால் மற்றும் சப்ரீன் ஆகிய இரு சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிபதியிடம் ஏறாவூர் பொலிஸார் அனுமதி கோரினர்.

அவ்விரு சந்தேக நபர்களையும் அடுத்த 24 மணித்தியாலயங்களுக்கு பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிபதி பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதுடன் ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் நாளை (22.9.2016) வியாழக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிபதி இந்த மூன்று பேரையும் நாளை வியாழக்கிழமை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏறாவூரில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top