முஸ்லிம்களை கிண்டலடித்து கேலி சித்திரம் தீட்டிய
ஜோர்டான் எழுத்தாளர் இன்று நீதிமன்ற வாசலில் சுட்டுக்கொலை
ஜோர்டான்
நாட்டில் வெளியாகும் பிரபல பத்திரிகையில் முஸ்லிம்களை கிண்டலடித்து
கேலி சித்திரம் தீட்டியதால் மதஅவமதிப்பு வழக்கில் ஆஜராகவந்த பிரபல எழுத்தாளர் இன்று
நீதிமன்ற வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜோர்டான்
நாட்டை சேர்ந்தவர்
நஹீத் ஹட்டார்.
கிறிஸ்தவ மதத்தை
சேர்ந்த இவர்
இஸ்லாமியர்களுக்கு எதிரான சித்தாந்தத்தை
பின்பற்றிவரும் பிரபல எழுத்தாளராக ஜோர்டான் மக்களிடையே
பிரபலமானவர்.
சுவர்க்கத்தில்
தாடிவைத்த ஒருவர்
பெண்களுடன், புகைபிடித்தபடி கட்டிலில் படுத்துகொண்டு மதுவும்,
முந்திரிபருப்பும் கொண்டுவரும்படி கடவுளுக்கு
கட்டளையிடுவதுபோல் கருத்துப்படத்துடன் (கார்ட்டூன்) வெளியான ஒரு கட்டுரையை
இவர் சமீபத்தில்
எழுதி இருந்தார்.
இந்த
கட்டுரை தங்களது
மத உணர்வுகளை
புண்படுத்துவதாக ஜோர்டான் நாட்டு முஸ்லிம்கள் உடனடியாக
அவர்மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்
என வலியுறுத்தி
போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த மாதம் நஹீத் ஹட்டாரை கைதுசெய்த
பொலிஸார், பிறமதத்தவரின்
உணர்வுகளை காயப்படுத்தியதாக
கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
தலைநகர்
அம்மானில் நடைபெற்றுவந்த
இந்த வழக்கில்
ஆஜராவதற்காக நஹீத் ஹட்டா இன்று
கோர்ட்டுக்கு வந்தார். அப்போது கோர்ட் வாசலில்
இருந்தவர்களில் ஒரு மர்மநபர் அவரை நோக்கி
துப்பாக்கியால் சுட்டான். மூன்று குண்டுகள் உடலை
துளைக்க இரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த
அவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரை
கொன்றதாக சுமார்
50 வயது மதிக்கத்தக்க
நபரை கைது
செய்துள்ள பொலிஸார், விசாரணை
நடத்தி வருகின்றனர் என வெளிநாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.