சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக
இலங்கையும் அறிவிப்பு?
இஸ்லாமாபாத்தில்
நடக்கும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கையும் அறிவித்துள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளது.
பயங்கரவாதத்தை
வன்மையாக கண்டிப்பதாகவும், பாகிஸ்தானில் மாநாடு நடத்தும் சூழ்நிலை இல்லை எனவும் இலங்கை
தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதுது.
காஷ்மீரின்
யூரி தாக்குதலை
கண்டிக்கும் விதமாக இஸ்லாமாபாத்தில் நடக்கும் சார்க்
மாநாட்டை புறக்கணிக்கப்
போவதாக இந்தியா
அறிவித்திருந்தது.
இந்த
விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சார்க் மாநாட்டை
புறக்கணிக்க போவதாக ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம்
ஆகிய நாடுகளும்
அறிவித்தன. இந்த நாடுகளில் இலங்கையும் இணைந்து கொண்டதாக
அறிவிக்கப்படுகின்றது
சார்க்
அமைப்பில் உள்ள
8 நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் மாநாட்டை
புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. இதனால் சார்க்
மாநாடு ரத்து
செய்யப்பட வாய்ப்பு
இருப்பதாக கூறப்பட்டது.
இதனால் இவர்களை
சமாதானப்படுத்தி சார்க் மாநாட்டை நடத்த, மாநாட்டிற்கு
ஏற்பாடு செய்துள்ள
நேபாளம் முயற்சி
மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில்
சார்க் மாநாட்டை
புறக்கணிப்பதாக இலங்கையும் அறிவித்துள்ளது.
மேலும் பயங்கரவாதத்தை
வன்மையாக கண்டிப்பதாகவும்,
பாகிஸ்தானில் மாநாடு நடத்தும் சூழ்நிலை இல்லை
எனவும் இலங்கை
தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு
எதிரான நடவடிக்கையில்
இந்தியாவிற்கு இலங்கை ஆதரவு தெரிவித்துள்ளது, பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகப்படுத்தி உள்ளது.
சார்க் அமைப்பில்
உள்ள 5 நாடுகள்
மாநாட்டை புறக்கணிப்பதாக
அறிவித்துள்ளதால், சார்க் மாநாடு
ரத்தாகும் நிலை
ஏற்பட்டுள்ளது. சார்க் மாநாடு நடக்கும், இல்லையா
என்பது குறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (அக்.,1) வெளியாகும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருப்பதாவது,-
அனைத்து விதமான முடிவுகளும் ஒருமித்த உணர்வுடன் எடுக்கப்பட வேண்டும் என்று சார்க் சாசனத்தின் பொது விதிகள் வலியுறுத்துகிறது.
சார்க் நாடுகளின் தலைவர்களை கூட்டுவதற்கும் இது பொருந்தும். அனைத்து வகையான தீவிரவாதத்தையும் இலங்கை கண்டிக்கிறது. சார்க் நாடுகளின் பகுதிகளில் நிலவி வரும் தீவிரவாதம் தொடர்பான பிரச்சனைகளை தீர்மானகரமான முறையில் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் 9, 10-ந்திகதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வருகிறது.
0 comments:
Post a Comment