ராபிததுல் அஹ்லிஸ் ஸுன்னாவின் எழுச்சி மாநாடு
ராபிததுல் அஹ்லிஸ் ஸுன்னாவின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (24)அஸர் தொழுகை முதல் இரவு 10.30 மணி வரை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் விசேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு இடம் பெற்றது.
தென் இந்தியாவிலிருந்து வருகை தந்த சர்வதேச அழைப்பாளர் மௌலவி அப்துல் பாஸித் புஹாரி “நபிகளாரின் அழுகை தரும் படிப்பினைகள்” எனும் தலைப்பில் உருக்கமான விசேட மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார். அத்தோடு, பிரபல உள்ளூர் சொற்பொழிவாளர்களான மௌலவி முபாரக் (மதனி) “முஸ்லிம் உலகம் சந்திக்கும் பித்னாக்களும் அதை எதிர்கொள்ளும் வழிகளும்” எனும் தலைப்பிலும், மௌலவி அபூபக்கர் சித்தீக் (மதனி) “அல்லாஹ்வின் அன்பும், பெறுவதற்கான வழிகளும்” எனும் தலைப்பிலும், மௌலவி இஸ்மாயில் (ஸலபி) “தவறாகப் புரியப்பட்ட தவ்ஹீத்” எனும் தலைப்பிலும், மௌலவி றயீஸுதீன் (ஷரயீ) “தவறான பொருளீட்டலும் தவிர்ப்பதற்கான வழிகளும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மௌலவி அப்துல் பாஸித் புஹாரி உரையாற்றுவதையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
(சாய்ந்தமருது எம்.எஸ்.எம். சாஹிர்)
0 comments:
Post a Comment