கல்­மு­னையை முஸ்­லிம்கள்

கப­ளீ­கரம் செய்­­வில்லை

கல்­முனை அபி­வி­ருத்­திக்கும் முகா­மைத்­துவத்­திற்­கு­மான சபை


தமிழ்­தே­சி­யக்­கூட்­­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளியே இயங்­கு­கின்ற சில அமைப்­பு­களும் கல்­முனை நகரம் தமிழ் மக்­­ளுக்­கு­ரி­­தென்றும் அதனை கல்­மு­னைக்­கு­டியைச் சேர்ந்த முஸ்­லிம்கள் கப­ளீ­கரம் செய்ய முயற்­சி­யெ­டுத்து வரு­கின்­றனர் என்றும் முரண்­பா­டான கருத்­துக்­­ளையும் எவ்­வித ஆதா­­மற்ற பொய்­­ளையும் பாரா­ளு­மன்­றத்­திலும் வெளி­யிலும் பரப்பி வரு­­தாக கல்­முனை அபி­வி­ருத்­திக்கும் முகா­மைத்­து­வத்­து­வத்­திற்­கு­மான சபையின் சார்­பாக அதன் பொதுச் செய­லாளர் சிரேஷ்ட சட்­டத்­­ரணி யூ.எம்.நிஸார் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­­தா­வது

உண்மை வர­லாறு தெரி­யா­­தாலும்,  உண்­மையை மறைத்து பொய்­யான வர­லா­று­களை உரு­வாக்கி அதில் இலாபம் தேட முயற்­சிப்­­வர்­­ளாலும் என்றும் நீடித்து நிற்­கக்­கூ­டிய தமிழ், முஸ்லிம் நல்­லு­றவு சீர்­கு­லை­யக்­கூ­டாது என்ற ஒரே­யொரு நோக்­கத்­திற்­காக கல்­முனை நகர் சம்­பத்­தப்­பட்ட ஒரு சில உண்மை வர­லா­று­களை இங்கு  குறிப்­பிட விரும்­பு­கிறோம்.

தற்­போது தோற்­­­ளித்­துக்­கொண்­டி­ருக்கும் கல்­முனை மாந­கர சபை­யா­னது நான்கு உள்­ளு­ராட்சி பிரி­வு­களை 1933 ,ல் அமு­லுக்கு வந்த டொனமுர் கொமிஸன் சீர்­தி­ருத்­தத்­திற்­­மைய கல்­முனை பட்­டின சபை சபையும் அதன் எல்­லை­­ளாக வடக்கே தாழ­வட்­டவான் வீதி­யையும், தெற்கே கல்­முனை ஸாஹிரா கல்­லூரி வீதி­யையும்,  கிழக்கே கட­லையும்,  மேற்கே வயல் வெளி­­ளையும் கொண்­டி­ருந்­தது. மேற்­கூ­றிய எல்­லை­­ளுக்­குட்­பட்ட  பட்­டின சபைப்­பி­­தேசம் தற்­காலம் கல்­முனை நகரம், கிழக்­கே­­மைந்­துள்ள தமிழ் குடி­யி­ருப்­புகள், தெற்­கே­­மைந்­துள்ள கல்­மு­னைக்­குடி எனும் முஸ்லிம் கிராமம், மற்றும் மணற்­சேனை, இஸ்­லா­மபாத் கிராமம் ஆகி­­வற்றை உள்­­டக்­கி­­தா­கவும் அத்­தோடு கர­வாகு தெற்கு கிரா­மச்­சபை (தற்­காலம் சாய்ந்­­­ருது பிர­தேச செய­­கப்­பி­ரிவு),  கர­வாகு வடக்கு கிரா­மச்­சபை, (பாண்­டி­ருப்பு,  மரு­­முனை, பெரிய நீலா­வணை கிரா­மங்­களை உள்­­டக்­கி­யது), கர­வாகு மேற்கு கிரா­மச்­சபை (நற்­பட்­டி­முனை தமிழ், முஸ்லிம் பிரி­வுகள், சேனைக்­கு­டி­யி­ருப்பு, துர­வந்­திய மேடு  ஆகிய கிரா­மங்­களை உள்­­டக்­கி­யது). ஆகி­யன ஏனைய மூன்று உள்­ளு­ராட்சி பிரி­வு­­ளாகும்.

கல்­முனை பட்­டின சபை எல்­லைக்­குள்­ளான பிர­தே­சத்­தி­லேயே தற்­­மயம் முரண்­பா­டான கருத்­துக்­களும்,  பிரச்­சி­னை­களும் எழுந்த வண்ணம் இருக்­கின்­றன.

கல்­முனை பட்­டின சபை 1946 ஆம் ஆண்டு காலத்­தி­லி­ருந்து இயங்­கிய பொழுதே அதன் பரப்­பெல்­லைக்குள் கல்­முனை வர்த்­தக மையம், முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட கல்­மு­னைக்­குடி கிராமம்,  தமி­ழர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட கல்­முனை நக­ரத்தின் கிழக்குப் பகுதி, நற்­பிட்­டி­முனை தமிழ்,  முஸ்லிம் பிரி­வுகள்,  மணற்­சேனை போன்ற பிரி­வு­களை காணலாம். 1946 ஆம் ஆண்டு காலத்­தி­லி­ருந்து விகி­தா­சார அடிப்­­டையில் 1994 இல் நடந்த பிர­தேச சபைத் தேர்தல் வரை கல்­முனை பட்­டின சபை எவ்­வித இன, மத ரீதி­யி­லான  பாகு­பா­டு­­ளின்றி தமி­ழர்கள் செறிந்து வாழும் கல்­முனை 1ம் வட்­டாரம்,  கல்­முனை 2ம் வட்­டாரம் என இரு வட்­டா­ரங்­­ளையும் முஸ்­லிம்கள் செறிந்­து­வாழும் கல்­முனை 3ம், 4ம், 5ம்,6ம்,7ம் வட்­டா­ரங்­­ளையும் நடந்து முடிந்த  கல்­முனை பட்­டின சபைத்­தேர்­தல்கள்;  அடிப்­­டையில் 2 தமிழ் பிர­தி­நி­தி­­ளையும், 5 முஸ்லிம் பிர­தி­நி­தி­­ளையும் கொண்­டி­ருந்­தது.

1946
ம் ஆண்டு நடை­பெற்ற முத­லா­வது கல்­முனை பட்­டின சபைத்­தேர்­தலில் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­­ளாக எஸ்.தங்­­ராசா மாஸ்டர், கே.கண­­திப்­பிள்ளை, மீ.ஆதம்­பாவா, .லே.சாஹுல்­­மீது, எஸ்.எம். யாசின் தம்பி, எம்.எம். இஸ்­மாயில் காரி­யப்பர், .சி.மதார்­லெவ்வை என்­­வர்­களும் தெரி­வு­செய்­யப்­பட்­­தோடு அச்­­பையின் முத­லா­வது தவி­சா­­ராக எம்.எம். இஸ்­மாயில் காரி­யப்­பரும் உப தவி­சா­­ராக எஸ்.தங்­­ராசா மாஸ்­டரும் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இத்­தெ­ரி­வி­லிருந்;து தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஓற்­று­மை­யாக கல்­முனை பட்­டின சபையை நிர்­­கித்து வந்­­­ரென்­பதும் நல்­முனை நகரம், தமி­ழர்கள் செறிந்து வாழும் கல்­முனை 1ம் வட்­டாரம், கல்­முனை 2ம் வட்­டாரம் என இரு வட்­டா­ரங்­களும் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் கல்­முனை 3ம்,4ம்,5ம்,6ம்,7ம் வட்­டா­ரங்­களும் ஒன்­றி­ணைந்த ஓர் உள்­ளு­ராட்சி பிரிவின் கீழ் எவ்­வித இன,மத,பிர­தேச ரீதி­யி­லான பாகு­பா­டு­­ளின்றி 1994ம்ஆண்டு பிர­தே­­சபைத் தேர்தல் வரை நிர்­­கிக்­கப்­பட்­டு­வந்­­தென்­பது தெட்­டத்­தெ­ளி­வா­கி­றது.(ஆதாரம்: கல்­முனை மாந­கர சபை வரி­­திப்பு ஏடுகள்

கல்­முனை நகரம்
கல்­முனை நகரம் - கல்­முனை பட்­டி­னத்தின்  மத்­தி­­­குதி பெரும்­பாலும் கடைத் தொகு­தி­­ளையும், கல்­முனை பிர­தேச செய­லக கட்­டடம், கல்­முனை மாந­கர சபைக்­கட்­டடம், பொலிஸ் நிலையம், கல்­முனைச் சந்தைக் கட்­டடம், .போ. சபையின் கல்­முனை டிப்போ, தேசிய வீட­மைப்பு அதி­கார சபைக் கட்­டடம், கல்­முனை வாசி­­சாலை போன்­­வற்­றையும், ஏனைய அர­சாங்க, தனியார் கட்­­டங்­களை கொண்­டி­ருக்­கி­றது.

இந்­­­ருள்தான் கல்­முனை பிர­தேச செய­லக, கல்­முனை தமிழ் பிர­தேச செய­லக கட்­­டங்­களும் அடங்கி உள்­ளன.

கல்­முனை நகரின் மத்­திய பகுதி அதா­வது பஸார் அமைந்­துள்ள பிர­தே­சத்­தி­லுள்ள கடை­களில் 90 வீத­மா­னவை தற்­போது முஸ்­லிம்­­ளுக்குச் சொந்­­மாக இருப்­­தோடு அதில் பெரும்­பா­லான கடைகள் கல்­மு­னைக்­குடி முஸ்­லிம்­­ளுக்கு சொந்­­மா­­வுள்­­தென்­பது மறுக்க முடி­யாத விட­­மாகும். இக்­­டை­களின் பூர்­வீ­கத்தை தேடிப்­பார்க்­கையில் டி.எம்.எம்.அப்துல் காதர், எஸ்.எஸ். சொலுக்கார், எம்.எல்.புஹாரி கொழும்பு ரேபரி ஹாஜியார், மௌலானா பாமசி, லலிதா ஜூவலர்ஸ் போன்­­வர்­­ளுக்குச் சொந்­­மா­­வி­ருந்­தது. யாழ்ப்­பாண ஸ்ரோர்ஸ், சிசி­லியா ஸ்ரோர்ஸ், அன்பு ஸ்ரோர்ஸ், செல்­­நா­யகம் பெட்ரோல் நிலையம், வீரப்­பா­செட்­டியார், கதி­ரை­யா­வுக்குச் சொந்­­மான ஒரு சில கடை­களும் பின்னர் கல்­மு­னையைச் சேர்ந்த முஸ்­லிம்­­ளுக்கு சட்­­ரீ­தி­யாகக் கைமா­றி­யது வர­லா­றாகும்.

1970
இன் பின்னர் கல்­முனை கல்­முனை பஸ் நிலையம் அமைந்­தி­ருக்கும் இடத்­திற்கும் கல்­முனை தரவை பிள்­ளையார் கோவி­லுக்­கு­மி­டை­யி­லுள்ள  குளத்தை அண்­டிய பிர­தேசம் அரச பூமி­யா­­வி­ருந்து பின்னர் அப்­பி­­தேசம் கடை­களை அமைப்­­தற்­காக இன விகி­தா­சார அடிப்­­டையில் பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்­­ளுக்கும் சிறு­பான்­மை­யான தமி­ழர்­­ளுக்கும் அர­சாங்­கத்தால் பகிர்ந்­­ளிக்­கப்­பட்­டன. (ஆதாரம்:காணிப்­பேர்­மிட்­டுகள், கல்­முனை பிர­தேச செய­லகம்

கல்­முனை நக­ருக்கு வடக்கில் வடக்கு ஆதார வைத்­திய சாலைக்கு முன்­பாக அமைந்­துள்ள கடைத்­தொ­கு­தியில் சில கடைகள் கல்­மு­னைக்­கு­டியைச் சேர்ந்த  ரோஜா­பேக்­கரி உரி­மை­யா­­ருக்குச் சொந்­­மான ஓரு சில கடைகள், யார்ட் வீதியின் மூலை­யி­லுள்ள பசில்­ஜிட்­டுக்­கு­ரிய காணியும் கட்­டிடம், .ஆர்.எம்.ஹனி­பா­வுக்குச் சொந்­­மான பெட்ரோல் நிலையம், மல்­லிகா முத­லா­ளிக்­குச்­சொந்­­மான காணி, எஸ்.எல்.ஆர்.ரெஸ்­டுரண்ட் அமைந்­தி­ருக்கும் காணி மற்றும் கல்­மு­னையில் பிர­பல்­­மான சொர்ணம் நகை மாளிகை ஆகி­யன முதலில் முஸ்­லிம்­­ளுக்கு சொந்­­மா­­வி­ருந்து பின்னர் பயங்­­­வாத காலத்தில் தமி­ழர்­­ளுக்கு கைமா­றி­யது வர­லாற்று உண்­மை­யாகும்.

காலப்­போக்கில் தமி­ழர்­­ளுக்கு வழங்­கப்­பட்ட காணித்­துண்­டுகள் முஸ்­லிம்­­ளுக்கு கொழுத்த விலைக்கு கைமா­றிய கதையும் பயங்­­­வாத காலத்தில் முதலில் முஸ்­லிம்­­ளுக்கு சொந்­­மா­­வி­ருந்து பின்னர்  தமி­ழர்­­ளுக்கு கைமா­றி­யது வர­லாறும் தெரி­யாத ஒரு சிலர் இன்று ஒரு சில ஊட­கங்­களில் முஸ்­லிம்கள் தமி­ழர்­களை அடித்து விரட்டி அவ்­வி­டங்­களை ஆக்­கி­­மிப்பு செய்­­தாக அபாண்­­மாக புனை கதை­களை பரப்பி விட்­டுள்­ளனர்.

கல்­முனை நக­ருக்கு கிழக்கே அமைந்­துள்ள குடி­யி­ருப்பு காணிகள் தற்­காலம் இஸ்­லா­மபாத் பிர­தேசம். கல்­முனை நகர அபி­வி­ருத்தி வர­லாற்றில் ஒரு முக்­கிய பங்கை வகிக்­கி­றது.

இஸ்­லா­மபாத் கிராமம்:
இஸ்­லா­மபாத் என்ற பெய­ருடன் இப்­பொ­ழுது அமைந்­தி­ருக்கும் கல்­முனை நக­ருக்கு கிழக்­கே­­மைந்­துள்ள காடாய்க்­கி­டந்த பூமி. பூர்­வீக காலந் தொட்டு சிங்­­­வர்­­ளுக்கும், முஸ்­லிம்­­ளுக்கும் விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய ஓரு சில தமி­ழர்­­ளுக்கும் சொந்­­மான பூமி­யாக இருந்து வந்­துள்­ளது. ஹரிசன் தியேட்டர் உரி­மை­யாளர் டிக்ஸன் டி சில்வா. கேட் முத­லியார் எம். எஸ். காரி­யப்பர் மரு­­மு­னையைச் சேர்ந்த எஞ்­சி­னியர் காரி­யப்பர், சாஹுல் ஹமீது வைஸ் சேர்மன்,  கொழும்பு ஸ்ரேர்ர், டாக்டர் ஜெமீல்,  எஸ்.எம்.இஸ்­மாயில் ஹாஜியார், கொழும்பு ஸ்ரேர்ர் அக­­து­லெவ்வை ஹாஜியார், றவுப் ஹாஜியார், ஞான­ரட்ணம் மாஸ்டர், நவ­ரட்னம் சார்ஜன்ட், மட்­டக்­­ளப்பைச் சேர்ந்த சட்­டத்­­ரணி எட்வேர்ட் ஆகி­யோ­ருக்கும் பல ஏக்கர் காணிகள் சொந்­­மாக இருந்­துள்­ளன. 1976 இன் பின்பே முஸ்­லிம்­­ளுக்குச் சொந்­­மான காணி­களில் முஸ்லிம் குடி­யேற்றம் நிகழ்ந்துஇஸ்­லா­மபாத்என்ற பெயரும் சூட்­டப்­பட்­டது. இத்­­­வல்கள் எல்லாம் இற்­றைக்கு 75 வரு­டங்­­ளுக்­குட்­பட்­­வை­யாகும்.

சுனா­மியின் பின்பு பாதிக்­கப்­பட்ட மக்­­ளுக்கு 400 க்கு மேற்­பட்ட வீட்­டுத்­தொ­குதி கட்­டிக்­கொ­டுக்­கப்­பட்டு சகல இன மக்­­ளுக்கும் வீடுகள் வழங்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்­­ளுக்குச் சொந்­­மான பல ஏக்கர் காணிகள் சட்­­ரீ­தி­யாக அர­சாங்­கத்தால் சுவீ­­ரிக்­கப்­பட்டு 400 க்கு மேற்­பட்ட வீட்­டுத்­தொ­குதி, சுகா­தார நிலையம், காதி நீதி­மன்றம், வாசி­­சாலை, பல் தேவைக்­கட்­டிடம், வலயக் கல்வித் திணைக்­களம், ஆயுள்­வேத வைத்­தி­­சாலை, அர­சாங்க பாட­சாலை  போன்ற மக்­­ளுக்­கு­சே­வை­யாற்­றக்­கூ­டிய கட்­டி­டங்கள் கட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இதில் எவ்­வித கப­ளீ­­ரமோ ஆக்­கி­­மிப்போ ஏற்­பட்­­தாகத் தெரி­­வில்லை. தமி­ழர்­­ளுக்குச் ்களுக்குச் சொந்தமான எந்தக்காணியிலும் பலாத்காரமாகவோ அல்லது அத்துமீறியோ முஸ்லிம்கள்  குடியேற்றப்படவில்லையென்பதை திட்டவட்டமாக சட்டரிதீயான ஆவணங்களுடன் நிருபிக்கலாம்

கல்முனைக்குடி முஸ்லிம்கள் வியாபாரத்தினை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால் கல்முனை நகரில் காணிகளை வாங்கி தமது சொந்த செலவில் கட்டியெழுப்பியுள்ளனர்.

கல்முனை நகரில் அமைந்துள்ள கடைகள் தான் அவர்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் எனக் கூறினால் அது மிகையாகாது.

எக்காரணத்தைக் கொண்டும் கல்முனைக்குடி கிராமமும், கல்முனை பஸார் அமைந்துள்ள பகுதியும் இருவேறு பிரதேச செயலகங்களுக்கு உள்ளடக்கப்படுவதை முஸ்லிம்கள் விரும்பமாட்டார்கள்.

கல்முனை பஸார் பிரதேசம் கல்முனைக்குடி முஸ்லிம்களின் இதயம் எனக் கூறினால் கூட மிகையாகாது.

இந்த யதார்த்தத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனையவர்களும் உணர்ந்து தேசிய ரீதியாக இனங்களுக்கிடையில் நல்லெண்ண முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்களது அதிகார வெறிக்கு அப்பாவி தமிழ், முஸ்லிம்  சமூகங்களை பலிக்கடாக்களாக்கும் வண்ணம்  செயற்பட வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top