தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை

புதிய தகவல் அம்பலம்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு பாதிப்பு காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையில், முதல்வர் ஜெயலலிதா அனுமதிக் கப்பட்டார்; ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவர் வீடு திரும்பாதது, .தி.மு.க.,வினரிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம், முதல்வர் உடல்நிலை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவின. இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் காணப் பட்டது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'சிகிச்சை காரணமாக, முதல்வருக்கு காய்ச்சல் குணமாகி விட்டது.

'அவசியமான மருத்துவ பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. உடல்நலம் சீராகும் வரை, சில நாட்கள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று செல்லும்படி, முதல்வரிடம் அறிவுறுத்தப் பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் போன்றோர், 'முதல்வரின் உடல்நிலை குறித்து, தெளிவான அறிவிப்பை, அரசு வெளியிட வேண்டும்; அமைச்சர்கள்,
அதிகாரிகளுடன், அவர் பேசுவதாக இருந்தால், அந்த புகைப்படங்களை வெளியிட வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர். ஆனால், நேற்று வரை, முதல்வர் புகைப்படம் வெளியாக வில்லை.

வழக்கம் போல, நேற்று காலை, அரசு அதிகாரி கள், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று வந்தனர். இதற்கிடையில், முதல்வருக்கு அளிக் கப்பட்ட சிகிச்சை குறித்து, அதிகாரப் பூர்வமற்றதகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

முதல்வர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தும், அவருக்கு இருந்த காய்ச்சல் குணமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்கப்பட்டது. தொடர்ந்து, இதயத்தின் சீரான இயக்கத்திற்காக, கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது, அனைத்து விதமான சிகிச்சை முடிந்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். உடல் நிலை நன்றாக உள்ளது. ஓரிரு நாளில், மருத்துவ கண்காணிப்பு முடிந்து விடும். அதன் பிறகே, அவர் வீடு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதை உறுதிப்படுத்த அரசு தரப்பும், மருத்துவமனை வட்டாரமும் மறுத்து விட்டன.
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வீணை காயத்ரி விசேஷ வழிபாடு நடத்துகிறார். தமிழ்நாடு இசை பல்கலை துணைவேந்தரான அவர், 11ம்தேதி விஜயதசமி அன்று, அம்மன் சன்னிதியில் வீணையை மீட்டி, நோய் தீர்க்கும் ராகம் இசைக்கிறார்.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, அ.தி.மு.க.,வினர் பல்வேறு விதமான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில், வீணை காயத்ரி இந்த வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.

நோய் தீர்க்கும் ராகம், கீர்த்தனைகளுடன் வீணை மீட்ட, துணை வேந்தர் முடிவு செய்துள் ளார். இவர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய, பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள னர்.பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்ற பெண், சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், அவ்வப் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளி யிட்டு வருகிறார்.நேற்று முன்தினம், ஜெய லலிதா உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்பும் வகையில் தகவல்களை வெளியிட்டார்.

இதுகுறித்து, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன், போலீஸ் கமிஷ னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, மத்திய குற்றப் பிரிவு போலீசார், தமிழச்சி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்; அவரை கைது செய்யவும் முயற்சி எடுத்து வருகின்றனர். மேலும், 'இது போன்று வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும்' என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.


முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற அ.தி.மு.க தொண்டர்கள் அப்பல்லோ மருந்துவமனை வாசலில் பூசணிக்காய் உடைத்தனர்.

அப்பல்லோ மருந்துவமனைக்கு வந்த வெண்ணிற ஆடைநிர்மலா, குமாரி சச்சு

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top