உங்கள் சாணக்கியம் சறுக்கி விட்டால்,
நொறுங்கி போவது நாங்கள்தான்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு பகிரங்க கடிதம்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்., ஹக்கீம் அவர்களுக்கு,
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சார்பாக நான்எழுதும் கடிதம்.
தலைவர் அவர்களே!
தேர்தல் காலங்களில் பல நோக்கங்களுக்காக நாங்கள் உங்களுக்கு வாக்களித்தாலும், அந்த வாக்கின் அனுமதியை பெற்றுக்கொண்டு, அரசியல் சம்பந்த பட்ட எல்லா விடயங்களிலும் முஸ்லிம்கள் சார்பாக நீங்கள் முடிவு எடுத்து விடாதீர்கள்.
நீங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டதின் பின் பல முடிவுகளில் நீங்கள் தவறு செய்துள்ளீர்கள்.
2002ம் ஆண்டு நோர்வே சார்பாக ஏற்படுத்தப்பட்ட ரணில், பிரபா ஒப்பந்தத்தில் முஸ்லிம் சமூகத்தை ஒரு குழு என்று குறிப்பிட்டதையும், அதன் மூலம் புலிகளினால் அந்தக்காலப்பகுதியில், முஸ்லிம் சமூகம் கடித்து குதறப்படும் போது, பாதுகாக்க யாரு இல்லாமல் பட்ட கஸ்டங்களை நீங்களும் அறிவீர்கள்.
அதன் வேதனை அறிந்து, அன்று நீங்கள் மூதூரிலே சத்தியாக்கிரகம் இருந்தீர்கள்.
அன்றய பிரதமரும்,இந்த ஒப்பந்தத்தின் சூத்திரதாரியுமான ரணில் விக்கிரமசிங்க மூதூருக்கு வந்து முஸ்லிம் சமூகத்துக்கு நடக்கும் கொடுமைகளுக்கு பதில் சொல்லும் வரை நான் மூதூரை விட்டு செல்ல மாட்டேன். என்று கூறி சத்தியம் செய்து அங்கே இருந்தீர்கள்,
ஆனால் ரணில் வரவில்லை, பிறகு நீங்களாகவே திருக்கோணமலையூடாக கொழும்புக்கு சென்றுவிட்டீர்கள். அந்த தவறினால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
அதன் பின் குறிப்பிட்டு சொல்ல கூடிய தவறாக, சர்வதிகார ஆட்சிக்கு வழிவகுத்த 18வது திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தீர்கள்.
அதன் பிறகு நான் செய்தது தவறுதான் என்று ஒத்துக்கொண்டீர்கள்.
மாகாண சபை அதிகாரங்களை குறைக்கும் சட்டமூலமான, தெவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளித்தீர்கள்.
பிறகு அது எனக்கு தெரியாமல் நடந்த விடயம் என்று கூறினீர்கள்.
அதன் காரணமாகத்தான் உங்களிடம் கேட்கின்றோம்.
வடகிழக்கு இணைப்பு விடயத்தில் உங்கள் என்னம் என்ன என்பதை, உங்கள் திருவாயால் கூறுங்கள்.
அதனை கூறுவதனால், எங்களுக்கு உங்கள் என்னம் தெறிந்து விடும்.
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள், புலிகளின் துப்பாக்கிக்கு நேர் நின்று, பல விடயங்களை உரக்கச் சொன்னார்.
அதில் வடகிழக்கு இணைப்பு என்பது தனது தாயை விற்பதற்க்கு சமம் என்று கூறினார்.
அப்படிப்பட்ட தலைவரின் வழிவந்த நீங்கள் இந்த விடயத்தை கூற பின்நிற்பதன் நோக்கம் என்ன என்பது புரியவில்லை.
தலைவர் அவர்களே! சாணக்கியம் என்ற போர்வையில் நீங்கள் சென்ற காலங்களில் எடுத்த தீர்மாணங்களினால், முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட இழப்புக்களை நீங்கள் அறிவீர்கள்.
அப்படியான விடயங்கள் இப்போதும் நடந்துவிடக்கூடாது.
தமிழர்கள் அவர்களின் உரிமைகளை ஒழிவு மறைவின்றி, யாருக்கும் பயப்படாமல் முன் வைக்கும்போது, நாம் இந்த விடயத்தில் ஓடி ஒழிவதன் காரணம் என்ன?
தலைவர் அவர்களே!
இந்த விடயத்தில் எங்களை கைவிட்டு விடாதீர்கள்.
இந்த காலம் மிக முக்கியமான காலம்.
வெளிநாட்டு அழுத்தங்களோடு அரசியல் தீர்வு திட்டம்மொன்று வரப்போகின்றது.
இந்த நேரத்தில் உங்கள் சாணக்கியம் சறுக்கி விட்டால்,
நொறுங்கி போவது நாங்கள்தான்.
ஆகவே வடகிழக்கு விடயத்தில் நீங்கள் வாய் திறக்க வேண்டும்,
அதனை கொண்டு நாங்கள் காய் நகர்த்த வேண்டும்.
என்று கேட்டு விடைபெறுகின்றேன்...
வஸ்ஸலாம்..........
எம்.எச்.எம்.இப்றாஹீம்
கல்முனை
0 comments:
Post a Comment