நிந்தவூரில் இஸ்லாமிய எழுச்சி மாநாடு
(எம்.எஸ்.எம்.சாஹிர்)
ராபிததுல் அஹ்லிஸ் ஸுன்னாவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 10.30 மணி வரை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் விசேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு இடம் பெறவுள்ளது.
இம்மாநாட்டில் தென் இந்தியாவிலிருந்து வருகை தரும் சர்வதேச அழைப்பாளர் மௌலவி அப்துல் பாஸித் புஹாரி விசேட மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார். அத்தோடு, பிரபல உள்ளூர் சொற்பொழிவாளர்களான மௌலவி முபாரக் (மதனி), மௌலவி அபூபக்கர் சித்தீக் (மதனி), மௌலவி இஸ்மாயில் (ஸலபி), மௌலவி றயீஸுதீன் (ஷரயீ) ஆகியோர், அல்லாஹ்வின் அன்பும், பெறுவதற்கான வழிகளும், தவறாகப் புரியப்பட்ட தவ்ஹீத், தவறான பொருளீட்டலும் தவிர்ப்பதற்கான வழிகளும், நபிகளாரின் அழுகை தரும் படிப்பினைகள், முஸ்லிம் உலகம் சந்திக்கும் பித்னாக்களும் அதை எதிர்கொள்ளும் வழிகளும் போன்ற மிகவும் பயனுள்ள தலைப்புகளில் சொற்பொழிவாற்ற இருப்பதாகவும் ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் எஸ். எம். இனாமுல்லாஹ் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் 23ஆம் திகதி பறஹதெனியாவில் ஜும்ஆ பயானை மௌலவி அப்துல் பாஸித் நிகழ்த்தவிருப்பதோடு, எதிர்வரும் 25ஆம் திகதி மருதமுனையிலும் இடம்பெறவிருக்கும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைவரும் கலந்து பயனடையுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.