நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர
பிணையில் விடுதலை
தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக குற்றஞ்சுமத்தப்பட்டவழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 8பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் பத்மினி என்.ரணவக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் இன்று நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்காபிரேமசந்திர உள்ளிட்ட 8 பேரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான்உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரையும் தலா ரூபா 50 ஆயிரம் பெறுமதியான ரொக்கப் பிணையிலும்,தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான்உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10ம் மற்றும் 11ம்திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லவதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment