(NOLIMIT) நோலிமிட்டின்
பாணந்துறை காட்சியறை
புதிய எழுர்ச்சியுடன்
இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றான (NOLIMIT) நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை புதிய எழுர்ச்சியுடன் இன்று
திறந்து வைக்கப்படுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் 3 நபர்களால் கட்டடத்தின் முகப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதல் மூலமே குறித்த கட்டடம் தீப்பற்றி எரிந்தததாக தெரிவிக்கப்பட்டது.
(NOLIMIT) நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை தீக்கிரையாகப்படுவதற்கு முன்னரும் பின்னரும் (புகைப்படங்கள்)
நோலிமிட்
தீக்கிரையாகப்படுவதற்கு முன்னரும் பின்னரும் (புகைப்படங்கள்)
இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றான (NOLIMIT) நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறைதீக்கிரையாக்கப்படுவதற்கு
முன்னரும் தீக்கிரையாக்கப்பட்ட பின்னரும் புகைப்படக் காட்சிகள்
இன்று 21 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் 3 நபர்களால் கட்டடத்தின் முகப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதல் மூலமே குறித்த கட்டடம் தீப்பற்றி எரிந்தததாக தெரிவிக்கப்படுகின்றது
,
இந்நிலையில்,அதிகாலை 3 மணியளவில் தனக்கு தொடராக 6 வெடிச்சத்தங்கள் கேட்டதாக, குறித்தகட்டடத்துக்கு அருகாமையில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்
எனவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் நடந்த இடத்துக்கு வருகை தந்த தீயணைப்புப் படையினரின் பவுசர் வண்டிகளில் தீயைஅணைப்பதற்கான தண்ணீர் வசதி இல்லாமல் இருந்ததே கட்டடம் முற்றாக நிர்மூலமானதற்கு காரணம்எனவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடைபெற்ற வேளை குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் நால்வர் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தபோதும் அவர்களுக்கு எதுவித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்படுகின்றது.
ஆச்சிரியம்
என்னவென்றால் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் பொலிஸார் இந்த தீவிபத்து மின்சார ஒழுக்கு காரணமாகவே தீ மூண்டிருக்கலாம் எனச் சந்தேகம் ஒன்றை
வெளியிட்டிருப்பதுதான்.
http://makkalviruppam.blogspot.com/2014/06/nolimit.html
0 comments:
Post a Comment