கல்முனை சாய்பு வீதியைச் சேர்ந்த முதலாளியின் ஜனாஸா
காத்தான்குடி கடற்கரையில்
சிறிய வாகனமொன்றிலிருந்து மீட்பு
கல்முனை சாய்பு வீதியைச் சேர்ந்த முதலாளியான சீனிமுஹம்மது முஹம்மது
பாறூக் (வயது 60) என்பவரின் ஜனாஸா மட்டக்களப்பு, காத்தான்குடி 6ஆம் குறிச்சியை அண்டிய
கடற்கரைப் பிரதேசத்தில் இன்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை சிறிய வாகனமொன்றிலிருந்து
மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி
பொலிஸாருக்கு
கிடைத்த தகவலொன்றை
அடுத்து அங்கு
விரைந்த பொலிஸார் கடற்கரையில்
பட்டா எனப்படும்
சிறிய வாகனமொன்றிலிருந்து இந்த ஜனாஸாவை மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து
மரக்கறி ஏற்றி
காத்தான்குடிக்கு வருகை தந்த வாகனத்திலேயே அந்த
ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது.
வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தானும் தனது முதலாளியும் பட்டா ரக வாகனத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கல்முனைப் பிரதேசத்துக்குச் செல்லும் வழியில் வழமையாக காத்தான்குடிக் கடற்கரையில் உறங்கிவிட்டுச் செல்வதாக குறித்த வாகனச் சாரதி தெரிவித்துள்ளார்.
அவ்வாறே ஞாயிற்றுக்கிழமையும் (25) யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட தாம், காத்தான்குடிப் பிரதேசத்தை அடைந்தபோது கடற்கரையில் உறங்கியதாகவும் இன்றையதினம் அதிகாலை தனது முதலாளியை எழுப்பியபோது அவர் அசைவு அற்றுக் காணப்பட்டார். இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது முதலாளி இருதய நோய்க்கு சிகிச்சை பெற்றுவருவதுடன், கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக குறித்த முதலாளியுடன் தான் பணி புரிவதாகவும் பொலிஸாரிடம் சாரதி மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment