இலங்கையின் இறக்குமதி வரலாற்றில்

93 மில்லியன் ரூபா வரி செலுத்தப்பட்ட ஆடம்பர கார்

இலங்கையின் இறக்குமதி வரலாற்றில் இதுவரையில் அதிக விலைமதிப்புள்ள கார் ஒன்று தற்போது தருவிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த காரை முன்னணி வர்த்தகர் ஒருவரே இறக்குமதி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

158 மில்லியன் ரூபா பெறுமதியான Rolls Royce என்ற ஆடம்பரமான காரே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல வர்த்தகர்கள் பயன்படுத்தும் Rolls Royce Wraith என்ற காரே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காரின் இறக்குமதி தீர்வையாக 93 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Rolls Royce Wraith என்ற காரிற்கான தீர்வை பணம் நேற்றைய தினம் செலுத்தப்பட்டதுடன் தற்போது சுங்க திணைக்களத்தில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் நிறை சுமார் 2.4 தொன்கள் என்றும் இரட்டைக் கதவுகளைக் கொண்ட இந்த கார் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top