நான்கு நாடுகள் புறக்கணித்ததை தொடர்ந்து

சார்க் மாநாடு ரத்து?


இந்தியா, வங்கதேசம், பூடான் மற்றும் ஆப்கன் ஆகிய நாடுகள் புறக்கணித்ததை தொடர்ந்து சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் சார்க் மாநாடு, எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. காஷ்மீர் மாநிலம் யூரியில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என வெளியுறவு அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதேபோல், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என வங்கதேசம், பூடான் மற்றும் ஆப்கன் நாடுகள் அறிவித்தன. இது தொடர்பான அறிக்கைகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக சார்க் அமைப்பின் தலைமையகமான நேபாள வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாநாட்டை ரத்து செய்வது தொடர்பான முடிவை நேபாள அரசு இன்னும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

சார்க் அமைப்பின் விதிமுறைப்படி, சார்க் கூட்டத்தில் ஒரு நாடு புறக்கணித்தால் கூட மாநாடு தானாக ரத்தாகிவிடும் அல்லது தள்ளிவைக்கப்படும். சார்க் பொதுச்செயலாளர் நியூயார்க் நகர் சென்றுள்ளார். அவர் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் சார்க் மாநாடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.

சார்க் அமைப்பில் உள்ள 8 நாடுகளில் நான்கு நாடுகள் இந்த மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இதனால், இஸ்லாமாபாத் நகரில் நடைபெற உள்ள மாநாடு ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாகிஸ்தானுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top