முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் விவகாரமும்
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும்
முஸ்லிம் காங்கிரஸ்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் அளித்த வாக்குகளின் அட்ப்படையில் தமக்கு
கிடைத்த தேசியப் பட்டியல் தொடர்பாக கட்சிகளின் தலைமைகள் மக்களுக்கு பல வாக்குறுதிகளை
கடந்த ஒரு வருடங்களுக்கு முன் வழங்கியிருந்தன.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தமக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல்
பிரதிநித்துவங்களை தற்காலிக அடிப்படையில் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவைகள்
உரிய இடங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக விரைவில் வழங்கப்படும் என்று கட்சியின்
தலைமையினால் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல்களில்
ஒன்று தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டவர்களில்
ஒருவரை இராஜிணாமாச் செய்ய வைத்து பல மாதங்கள் கடந்த பின்னர் திருக்கோணமலைக்கு எப்படியோ
வழங்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல்களில் அடுத்த தற்காலிகமாக
வழங்கப்பட்ட நியமனம் ஒரு வருடத்தைக் கடந்தும் இதுவரை உரிய பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
வகையில் சென்றடையாமல் தற்காலிக நியமனமாகவே இருந்து கொண்டிருக்கின்றது.
இதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையினால் வழங்கப்பட்ட
வாக்குறுதியின் பிரகாரம் தமது கட்சிக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியலை புத்தளம் நவபிக்கு ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படியில் வழங்கியதாகக் கூறப்பட்டது. தற்போது ஒரு வருடம் பூர்த்தியான பிறகும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின்
பிரகாரம் அவருக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீளப் பெற்று தகுதியான மற்றவருக்கு இதுவரை
வழங்கப்படவில்லை.
முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி
தற்காலிக தேசியப்பட்டியலும் ஒரு வருடகால தேசியப்பட்டியலும் உரிய பிரதேசங்களுக்கு தகுதியானவர்களுக்கு
வழங்கப்படல் வேண்டும் என வாக்களித்த மக்கள் கட்சித் தலைமைகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
.
0 comments:
Post a Comment