லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கும் பணிகள் ஆரம்பம்
சண்டே
லீடர் பத்திரிகையின்
முன்னாள் ஆசிரியரான
லசந்த விக்கிரமதுங்கவின்
சடலம் தோண்டி
எடுப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு
மேலதிக நீதிவான்
மொஹமட் மிஹால்
பொரளை பொது
மயானத்திற்கு இன்று காலை 8.45 அளவில் விஜயம்
செய்ததை அடுத்து
அவரது மேற்பார்வையின்
கீழ் சடலம்
தோண்டும் பணிகள்
ஆரம்பமானது. அத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பும்
பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும்
சடலம் தோண்டும்
இடத்திலிருந்து சற்று தொலைவிலிருந்தே செய்தி சேகரிக்குமாறும்,
காணொளி பதிவுசெய்யுமாறும்
ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.