மீண்டும் வெளிவரும் லசந்த விக்ரமதுங்கவின் சடலம்

பொரளை கனத்தையில் இருந்து மீள தோண்டி எடுக்கப்படும்
                                                              
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் நாளை 27ஆம் திகதி பொரளை கனத்தையில் இருந்து மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் காலை 8.30 மணிக்கு சடலம் தோண்டப்படவுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிசை நீதிவான் நீதிமன்றில் வைத்த கோரிக்கைகளுக்கு அமைய, கல்கிசை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனின் உத்தரவின்படி லசந்தவின் சடலமானது தோண்டி எடுக்கப்படவுள்ளது.


இந்நிலையில் தற்போதும் பொரளை கனத்தையில் உள்ள லசந்தவின் கல்லறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top