குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்
கண்டியில் நடமாடும் சேவை
கண்டி மாவட்டப் பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான நடமாடும் சேவை எதிர்வரும் வியாழக்கிழமை (29) மற்றும் வெள்ளிக்கிழமை (30) ஆகிய நாட்களில் நடைபெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை ஏற்பாடு செய்துள்ளது.
29ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு கட்டுகஸ்தோட்டை குஹாகொட வீதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பாரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டடத் தொகுதியிலும், 30ஆம் திகதி மு.ப. 9.30 மணிக்கு பேராதனை கெட்டம்பே தேசிய நீர் வழங்கல் சபையின் பிரதான அலுவலகத்திலும் இந்த நடமாடும் சேவை இடம் பெறும்.
நீர் வழங்கல் பொறுப்பதிகாரி அலுவலகத்திற்கு எழுத்து மூலம் சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக வழங்கப்பட்ட தொடர் இலக்கம் சகிதம் 29ஆம், 30ஆம் திகதிகளில் நடமாடும் சேவைக்கு சமூகமளித்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளலாம். முறைப்பாடு தெரிவிக்காத ஏனையோரும் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் காணலாம்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷணி பெர்ணாந்து புள்ளே, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன், நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment