நவாஸ்ஷெரீபின் காஷ்மீர் தொடர்பான பேச்சுக்கு
இந்திய உதவி அமைச்சர் எம்.ஜே. அக்பர் கடும் கண்டனம்!
ஐ.நா. சபையில் நவாஸ் ஷெரீபின் காஷ்மீர் தொடர்பான
பேச்சுக்கு இந்திய வெளிவிவகாரத்துறை துணை மந்திரி எம்.ஜே. அக்பர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
புர்கான்வானி தீவிரவாதி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவரை சுதந்திர போராட்ட தியாகி போல நவாஸ்ஷெரீப் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
பாகிஸ்தான் தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களையே கூறி வருகிறது. நவாஸ்ஷெரீப் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஒருமைல் தூரம் முன்னேறி வந்தால் இந்தியா பின்வாங்கி செல்வதாக கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ஒரு மைல் தூரம் முன்னேறி வந்ததை நாங்கள் இதுவரை பார்க்கவில்லை. அவர்கள் முன்னேறி வந்தால் தானே அடுத்த கட்டத்தை பற்றி பேச முடியும்.
அவர்கள் ஒரு கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை என்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஐ.நா. சபையில் அவர் பேசியிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் முரண்பாடானது. இந்தியா இதை நிராகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment