பெண்ணாக நடித்ததில் பெருமை:

சிவகார்த்திகேயன் தெரிவிப்பு



ஒரு பெண்ணாக வாழ்வதன் சிறப்பை ரெமோ கதாபாத்திரம் வழியே நான் உணர்ந்தேன். ஒரு காட்சியில் நான் நர்ஸாக இடம்பெறுவேன். அப்போது என் கையில் குழந்தை தரப்படும். அந்தக் காட்சியின்போது என் கண்ணில் கண்ணீர் வந்தது என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத். சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடிப்பதாலும் ஈர்க்கும்படியான டிரெய்லராலும் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தணிக்கையில் ரெமோ படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. அக்டோபர் 7-ம் திகதி, விடுமுறை சமயத்தில் ரெமோ வெளியாகிறது.

இந்தப் படத்தில் நடித்தது குறித்து சிவகார்த்திகேயன் மேலும் கூறும்போது:   

ஒரு பெண்ணாக வாழ்வதன் சிறப்பை ரெமோ கதாபாத்திரம் வழியே நான் உணர்ந்தேன். ஒரு காட்சியில் நான் நர்ஸாக இடம்பெறுவேன். அப்போது என் கையில் குழந்தை தரப்படும். அந்தக் காட்சியின்போது என் கண்ணில் கண்ணீர் வந்தது. என் கையில் குழந்தை இருந்தபோது என் வாழ்க்கையில் எனக்கு உதவிய அத்தனை பெண்களையும் நினைத்துப் பார்த்தேன். எனவே ரெமோ படத்தில் பெண்ணாக நடித்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்.


பொலிஸ் வேடத்தில் நடிக்கும்போது நான் எப்படி மிடுக்குடன் தோற்றமளிப்போம் என்று கற்பனை செய்துகொள்வோம். ஆனால் நர்ஸ் வேடத்தில் இது கடினம். ஒரு பெண்ணாக நாம் எப்படிக் காட்சியளிப்போம் என்பது தெரியாதே! என்னால் எந்த வேடத்தையும் செய்யமுடியும் என்பதற்காக இந்த வேடத்தில் நடிக்கவில்லை என்றார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top