மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள பிரபல கடைவீதியில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்து சிதறிய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள இஸ்கான் பகுதியில் உள்ள பிரபல கடைவீதிக்குள் இன்று நுழைந்த ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை இயக்கினான்.

பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறிய இந்த வெடிகுண்டு தாக்குதலில் கடைவீதியில் இருந்த ஏழு பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top