121 கோன் ஐஸ் கிரீம்களை
ஒன்றின் மீது ஒன்றாக
அடுக்கி கின்னஸ் சாதனை
இத்தாலியை
சேர்ந்த ஒருவர் ஒன்றின் மீது ஒன்றாக 121 கோன் ஐஸ்கிரீம்களை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியை
சேர்ந்தவர் டிமிட்ரி பன்சியரா. சமீபத்தில் அங்கு
ஐஸ்கிரீம் திருவிழா
நடந்தது. அதையொட்டி
அவர் ஒரு
கோனில் 121 ஐஸ் கிரீம்களை ஒன்றின் மீது
ஒன்றாக அடுக்கி
கின்னஸ் சாதனை
படைத்தார்.
9.5 செ.மீட்டர் அகலமுள்ள கோனில்
121 கரண்டி ஐஸ்கிரீம்களை ஒன்றின் மீது ஒன்றாக
அடுக்கினார். அவை சரிந்து கீழே விழாதபடி
10 வினாடிகள் தாங்கி பிடித்தபடி நின்றார்.
இதற்கு
முன்பு 109 கரண்டி ஐஸ் கிரீம்களை ஒரே
கோனில் அடுக்கி
சாதனை படைத்து
இருந்தார். தற்போது தனது சாதனையை தானே
முறியடித்துள்ளார்.
இவர்
ஏற்கனவே உலகின்
மிகப்பெரிய ஐஸ்கிரீம் அடுக்குகளை உருவாக்கி சாதனை
படைத்துள்ளார். 58 சென்டிமீட்டர் அகலத்தில்
1.95 மீட்டர் நீளத்துக்கு உருவாக்கியுள்ளார்.
0 comments:
Post a Comment