இசை விருந்தில் தீ விபத்து
பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

அமெரிக்காவில் இசை விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 25 பேர் மாயமாகி விட்டதாகவும் அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், ஆக்லாந்தில் உள்ள 2 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தின் 2–வது மாடியில் நேற்று முன்தினம் கோல்டன் டோனா மற்றும் குழுவினரின் இசை மற்றும் நடன விருந்து நடந்தது.
இந்த நிகழ்ச்சியை சுமார் 100 பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், அங்கு உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவியது. உடனே அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் ஓடினர். அலறினர். வெளியே வர முடியாதபடிக்கு தீ சுடர் விட்டு எரிந்ததுடன், பெரும் புகை மண்டலமும் எழுந்தது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கோர தீ விபத்தில் 9 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருப்பதாக இப்போது தெரிய வந்துள்ளது. 9 பேரின் உடல்கள் கரிக்கட்டைகளாக மீட்கப்பட்டுள்ளன. 25 பேர் காணாமல் போய் விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களில் பலர் வெளிநாட்டுக்காரர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து, ஆக்லாந்தில் நடந்த தீ விபத்துகளில் மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top