500 கிலோ உடல் எடையை குறைக்க
இந்தியா வரும் எகிப்து பெண்
500
கிலோ உடல் எடையை குறைக்கும் அறுவை சிகிச்சைக்காக எகிப்து பெண் இந்தியா செல்கிறார்.
எகிப்தைச்
சேர்ந்த 36 வயது பெண் எமான் அகமது
ஆப்த் ஆட்டி.
இவரது உடல்
500 கிலோ எடை
உள்ளது.
இதனால்
அவரால் அன்றாட
பணிகளை செய்ய
முடியவில்லை. எழுந்து நிற்க முடியாமலும், நடக்க
முடியாமலும் அவதிப்படும் அவர் படுத்த படுக்கையாகவே
இருக்கிறார்.
உடல்
எடையை குறைக்க
பல்வேறு கிசிச்சை
மேற்கொண்டும் பலனில்லை. இந்த நிலையில் இந்தியாவில்
மும்பை டாக்டர்
முபஷல்
லக்தாவாலா என்பவரிடம்
அதிநவீன அறுவை
சிகிச்சை மூலம்
உடல் எடையை
குறைக்க முடிவு
செய்தார்.
அதற்காக
விசா கேட்டு
கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அவரது
கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து
சிறுநீரக மாற்று
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் இருக்கும் வெளியுறவு மந்திரி
சுஷ்மா சுவராஜுக்கு
எமானின் டாக்டர்
டுவிட்டரில் கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,
எமானின் உயிரை
காப்பாற்ற அவரது
அறுவை சிகிச்சைக்காக
இந்தியா வர
உதவுமாறு கோரிக்கை
விடுத்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டால் உடல்
எடையை குறைக்கும்
அறுவை சிகிச்சைக்காக
கெய்ரோ வழியாக
மும்பை வருகிறார்.
0 comments:
Post a Comment