சசிகலாவுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம்
போயஸ்கார்டனில் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாலும், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுசெயலருமான ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பொதுச்செயலர் பதவியை யார் வகிப்பார் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. யூகங்கள்:இது தொடர்பாக, மீடியாக்களில் பல்வேறு யூகங்கள் கிளம்பின.
இந்நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா , மதுசூதனன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டவர்கள் போயஸ்கார்டனில் சசிகலாவை நேரில் சென்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது சசிகலா அதிமுகவுக்கு தலைமை பொறுப்பேற்க வேண்டும் என கேட்டு கொண்டனர். செங்கோட்டையன் கை எடுத்து கும்பிட்டு கெஞ்சினார்.ஆரம்பமே இப்படியா ? இந்நிலையில் போயஸ்கார்டனில் குவிந்த அதிமுக தொண்டர்கள் சிலர் பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர் . போயஸ்கார்டன் கேட் இழுத்து மூடப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற தொண்டர்களுக்கும், பொலிஸாருக்கும், இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து சில தொண்டர்கள் பின்னி சாலையில் சசிகலாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சாலையில் அமர்ந்து போராடினர்.
0 comments:
Post a Comment