பொருளாதார
அபிவிருத்தித்
திட்டங்களில்
மட்டக்களப்பு மாவட்டம் முதல் நிலை
திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம்.றபீக்
நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் கிராமியப்
பொருளாதார அபிவிருத்தித்
திட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் முதல் நிலை
பெற்றுள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைவதாக கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின்
செயலாளர் எம்.ஐ.எம்.றபீக் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட செயற்திட்டங்கள் குறித்து
பார்வையிடும் பொருட்டு காத்தான்குடி, மண்முனை வடக்கு,
மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்கு
விஜயம் செய்து
அங்குள்ள அபிவிருத்தி
வேலைத்திட்டங்களை பார்வையிட்ட பின்னர் அங்கு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு
தொடர்ந்து கருத்து
தெரிவித்த கொள்கை
திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம்.றபீக்,
நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஆரம்பத்தில் ஐந்து மில்லியனாக
இருந்தது.
கடந்த
2015 ஆம் ஆண்டு
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட
நிதி வழங்கப்படவில்லை.
2016ஆம் ஆண்டு
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட
10 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய
நிதியும் சேர்த்து
15 மில்லியனாக 2016 ஆம் ஆண்டில்
ஒதுக்கப்பட்டது. அத்துடன், 2017 ஆம் ஆண்டிற்கு 10 மில்லியன்
ஒதுக்கப்பட வேண்டும்.
எனினும்
பிரதமரின் விசேட
பணிப்புரக்கனிப்பிற்கு அமைய மேலும்
5 மில்லியன் அதிகரிக்கப்பட்ட 15 மில்லியன்
வழங்கப்படவுள்ளது.
இதனை
விட இந்த
வடக்கு, கிழக்கு
மாகாணங்களில் வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதே போன்று விஷேட
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும்
அரசாங்கம் நடவடிக்கை
எடுத்து வருகின்றது.
இலங்கையின்
வடக்கு கிழக்கு
மாகாணங்களை சேர்ந்த எட்டு மாவட்டங்கள் மற்றும்
இதனை அண்டிய
மொனறாகலை, பதுளை,
பொலனறுவை மற்றும்
அநுராதபுரம் போன்ற மாவட்டங்களிலும் இந்த விஷேடமான
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உல்லாசப்பணத்துறை
மற்றும் வேறு
கைத்தொழில்கள் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கே உரித்தான
கைத்தொழில்கள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்காகவும், அதனை வளப்படுத்துவதற்காகவும்
அதே போன்று
திருகோணமலையில் துறைமுகத்தை அடிப்படையாக கொண்டு கைத்தொழில்
பேட்டைகளை உருவாக்குவதற்காகவும்
அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் எமது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு
வரும் அபிவிருத்தி
வேலைத்திட்டங்கள் மற்றும் பண்முகப்படுத்தப்பட்ட
நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் ஒரு
கிராமத்திற்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம் போன்ற
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அதன் முன்னேற்றம் தொடர்பில்
மாவட்டத்தின் சில பிரதேச செயலாளர் பிரிவில்
சென்று பார்வையிட்டேன்
இது
தொடர்பில் மட்டக்களப்பு
மாவட்ட திட்டமிடல்
பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகளுடன்
கலந்துரையாடிய பின்னர் திட்டங்களை பார்வையிட்டேன்.
முழு
இலங்கையிலும் மட்டக்களப்பு மாவட்டமே கிராமத்திற்கு ஒரு
வேலைத்திட்டம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட
வரவு செலவுத்திட்ட
செயற்திட்டங்களில் முன்னேற்ற அடிப்படையில்
முதலாவதாக காணப்படுகிறது.
அது தொடர்பில் நான்
மகிழ்ச்சியடைகின்றேன். இதற்காக மாவட்ட
அரசாங்க அதிபர்,
மாவட்ட திட்டமிடல்
பணிப்பாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள்,
ஏனைய திட்டங்களை
நடைமுறைப்படுத்துகின்ற உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன் என்று கொள்கை திட்டமிடல்
அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம்.றபீக்
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment