ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்!
எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழக முன்னாள் முதல்வர் மரணத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் சந்தேகம் எழுந்துள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து விஜயதாரணி கூறியிருப்பதாவது,
அப்போலோ மருத்துவமனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரவு 11.30 மணிக்கு இறந்ததாகக் கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது நாட்டின் பிரதமர் 11.09 மணிக்கே எவ்வாறு இரங்கல் செய்தியை கொடுத்தார்.

அதிகாரப்பூர்வமாக இறப்புச் சான்றிதழில்கூட இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்றுதான் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது நாட்டின் பிரதமர் 11.09 மணிக்கே எவ்வாறு இரங்கல் செய்தியை கொடுத்தார் என்று பார்க்கும்போது இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிச்சயமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று நான் கருதுகிறேன்.

ஒரு முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. முதல்வர் இறப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அதிமுகவோ அல்லது தமிழக அரசோ உண்மைகளை மக்களிடம் கூற வேண்டும் என கூறியுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top